/* */

துப்புரவு பணியாளர்கள் கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்

இழிவாக பேசிய அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

துப்புரவு பணியாளர்கள் கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு ஆர்ப்பாட்டம்
X

கடலூர் மாநகராட்சி அலுவலகம் முன் துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

கடலூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு ஆய்வு செய்ய இருந்தார். இந்தநிலையில் துப்புரவு பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு பணிகளை செய்ய அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தநிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகம் வந்த நகராட்சி நிர்வாக இணை இயக்குனரை சந்திக்க கூடியிருந்த துப்புரவு பணியாளர்களை நகர்நல அலுவலர் அரவிந்த ஜோதி ஒருமையில் பேசி திட்டியதாக கூறி கடலூர் மாநகராட்சி வாயில் முன்பு அமர்ந்து துப்புரவு பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அலுவலர்கள் வந்து பேச்சுவார்த்தை நடத்திய போதும் நகர் நல அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து இணை இயக்குநர் விஜயகுமார் அவர்களிடம் துப்புரவு பணியாளர்கள் ஒருமையில் பேசிய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் இழிவாக நடத்தப்படுகின்றனர் என்றும், கடலூர் மாநகராட்சியில் குப்பை கொட்ட இடமில்லாததால் செல்லும்போதெல்லாம் பொதுமக்கள் விரட்டுவதாகவும்,குப்பை கொட்ட இடமே இல்லை நடவடிக்கை வேண்டும் எனவும் துப்புரவு பணியாளர்கள் கோரிக்கை வைத்தனர். அக்டோபர் மாதம் வழங்கப்பட்ட ஆடைக்கு கைக்கூலி வழங்கவில்லை, சம்பள பாக்கி உள்ளிட்ட கோரிக்கைகளை மாநகராட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த இணை இயக்குநர் விஜயகுமாரை சந்தித்து துப்புரவு பணியாளர்கள் தெரிவித்தனர்.


Updated On: 4 Jan 2022 2:58 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டி அருகே, வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து ஆறு பேர்...
  2. கவுண்டம்பாளையம்
    கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் ; வாகன ஓட்டிகள்...
  3. கோவை மாநகர்
    பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழப்பு : தலைமறைவான ஓட்டுநர்...
  4. இந்தியா
    நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய 7 வழி...
  5. ஆன்மீகம்
    கொஞ்சம் பாலும் தேனும் கொடுங்க..! அறிவை அள்ளித்தருவார் விநாயகர்..!
  6. இந்தியா
    அரசியல் கட்சி மீது வழக்கில் குற்றம் சாட்டிய அமலாக்கத்துறை: நீதித்துறை...
  7. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  8. ஈரோடு
    ஆபத்தை உணராமல் காட்டாற்று வெள்ளத்தை கடந்த கடம்பூர் மலைக்கிராம...
  9. கரூர்
    கரூர் மாவட்டத்தில் மே 29ம் தேதி உள்ளூர் விடுமுறை : கலெக்டர் அறிவிப்பு
  10. அரசியல்
    மத்தியில் ஆட்சி அமைக்க மெஜாரிட்டி கிடைத்து விட்டது: அமித்ஷா பேச்சு