/* */

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்

நாளை முதல் பள்ளிகள் திறக்கவுள்ளதால் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தூய்மை பணிகள் தீவிரம்

HIGHLIGHTS

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளிகள் திறப்பு: தயாராகும் வகுப்பறைகள்
X

பள்ளிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது

தமிழகத்தில் திட்டமிட்டப்படி நாளை (செப்டம்பர் 1 ஆம் தேதி) பள்ளி, கல்லூரிகளைத் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி செல்லும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளையும் தமிழக அரசு வெளியிட்ட நிலையில், நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் தூய்மை செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன, இந்தநிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தவும், வகுப்பறைக்கு 20 மாணவ -மாணவிகள் கொண்டு மட்டுமே பள்ளிகள் இயங்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது.

கடலூர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு தூய்மை படுத்தப்பட்டது அத்துடன் மாணவர்கள் வகுப்பறைக்கு வரும் முன் உடல் வெப்பநிலை பரிசோதனை கிருமி நாசினி தெளிக்க தேவையான அனைத்து உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 31 Aug 2021 10:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  2. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  4. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  10. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...