/* */

வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறப்பு

ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்த வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது

HIGHLIGHTS

வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறப்பு
X

வண்டலூர் உயிரியல் பூங்கா

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டநிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் இன்று காலை 9 மணி முதல் பொதுமக்கள் பூங்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக, பூங்கா இயக்குநர் கருணபிரியா கூறுகையில், பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்கு வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு, சானிடைசர் வழங்கப்படுகிறது. முகக்கவசமும் வைக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. பூங்காவில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் பூங்காவில் ஆய்வு மேற்கொள்ள குழு அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும், பார்வையாளர்களின் பெயர் மற்றும் செல்போன் எண் சேகரிக்கப்படுகிறது. பூங்காவில் வாகனங்களில் செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. புலி, மான், சிங்கம் போன்ற விலங்குகள் இருக்கும் பகுதிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பூங்காவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் என்று கூறினார்

Updated On: 25 Aug 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்