/* */

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்

லஞ்ச ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இணைய குற்றங்கள், சம்பந்தமாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கூட்டம்
X

அரியலூரில் நடைபெற்ற ஊழல் தடுப்பு வாரம் விழிப்புணர்வு நிகழ்ச்சி 

அரியலூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு வாரத்தை முன்னிட்டு (26.10.2021 முதல் 01.11.2021) சுதந்திர இந்தியா இந்திய 75 -வது முறையாக நேர்மையுடனான தற்சார்பு குறித்து தத்தனூரில் உள்ள மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரியில் விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தலின்படி அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையகம்) விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்வி நிறுவன தாளாளர் ரகுநாதன் அவர்கள் அனைவரையும் வரவேற்று, மாணவ மாணவிகள் ஊழலுக்கு எதிராக செயல்பட வேண்டும். சைபர் குற்றங்களில் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், நண்பர்களின் தூண்டுதலால் சிறுசிறு போதை பழக்கங்களில் ஈடுபட ஆரம்பித்து அவர் வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறார் எனவும் நண்பர்கள் நல்ல வழியில் வழிநடத்த வேண்டும் எனவும் உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சந்திரசேகர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு மாபெரும் தடையாக ஊழல் உள்ளது. பொதுமக்கள் அரசு தனியார் துறை உட்பட அனைவருமே ஊழலை முற்றிலும் ஒழிக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம் நம் நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல நாம் அனைவரும் ஊழலுக்கு எதிராக ஒன்றுபடுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் காரியங்களுக்கு அரசு அலுவலகங்களுக்குச் சென்று முறையாக மனு கொடுக்க வேண்டும் கட்டணம் செலுத்த வேண்டி இருப்பின் கட்டண தொகையை மட்டும் செலுத்தி அதற்கான ரசீதை கேட்டு பெற வேண்டும்.

அரசு அலுவலகங்களில் குறுக்கு வழியில் தங்கள் காரியங்களை சாதித்துக் கொள்ள லஞ்சமாக பணம் கொடுத்தாலும் குற்றமாகும் அரசு அலுவலகங்களில் மூலம் அரசு திட்டங்களை செயல்படுத்த படும் போது அதில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் சட்டப்படியாக கடமையை செய்வதற்கு பொது மக்களாகிய உங்களிடம் லஞ்சமாக பணமோ பொருளோ அல்லது பிரதி உபகாரம் செய்ய நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது ஏஜெண்டுகள் மூலமாகவோ வேண்டினால் தயங்காமல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினருக்கு தகவல் அல்லது புகார் தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது

ஊழல் அல்லது லஞ்சம் சம்பந்தமாக தகவல் புகார் தெரிவிப்பவர்கள் இன் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் ஊழல் மற்றும் லஞ்சம் சம்பந்தமாக தகவல் அல்லது புகார் தெரிவிப்பதற்கு காவல் துணை கண்காணிப்பாளர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு 9498105398 (அ) 9498164023 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

அரியலூர் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு கள்ளச்சாராயம் குறித்தும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் உரையாற்றினார். மேலும் அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சாமல் இருக்க தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும், அரியலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் இல்லை என உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து அரியலூர் இணைய குற்றப்பிரிவு காவல் நிலைய காவல் ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையில் சைபர் குற்றங்களான KYC, ATM fraud, டவர் அமைத்தல், ஆசை வார்த்தை கூறி பண மோசடி செய்தல், வீடியோ கால் மோசடி, ஆபாச வலையில் சிக்க வைத்து அவர்களைத் துன்புறுத்தி மோசடி செய்தல், என இணைய குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். டெக்னிக்கல் உதவி ஆய்வாளர் சிவனேசன் இணையவழி குற்றங்கள் குறித்த சந்தேகங்களைத் மாணவர்களிடையே தெளிவு படுத்தினார்.

அரியலூர் மாவட்ட குற்ற பதிவேடு கூடம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன், எதை செய்தாலும் பெற்றோர்களிடமும் நண்பர்களிடமும் ஆலோசனைப்படி நடக்க வேண்டும். தவறான பழக்கவழக்கங்களினால் மாணவர்கள் இளைஞர்கள் தனது வாழ்வை இழந்து விடுவதாகவும், போதைப் பொருட்களில் அடிமையாதல் போன்றவற்றில் சிக்கி குற்றங்களில் ஈடுபடுகின்றனர் எனவே அவரவர் பெற்றோரின் ஆலோசனைப்படி நடக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அரியலூர் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகளின் பாதுகாப்பு, ஆண்கள் எவ்வாறு பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும் எனவும் , ஒவ்வொருவரும் தனது இலட்சியத்திற்காக பாடுபட வேண்டும் எனவும் மேலும் மேலும் முன்னேற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Updated On: 30 Oct 2021 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது