/* */

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரியலூர் கலெக்டர் தலைமையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

HIGHLIGHTS

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுத்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
X

பெண்களுக்குஎதிரான பாலியல் வன்கொடுமைகளை தடுத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு அரியலூர் கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமையில் நடந்தது.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்தான விழிப்புணர்வு கருத்தரங்கம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது.

இக்கருத்தரங்கில், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார்.

மேலும், இந்திய அரசியல் சாசனச்சட்டத்திலும் பெண்களுக்கான பிற பாதுகாப்பு சட்டங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது போன்று பெண்களின் வளர்ச்சி, மேம்பாடு, பாதுகுhப்பு குறிப்பாக பணியிடங்களில் பாலியல் வன்முறையற்ற பாதுகாப்பான சூழ்நிலை உறுதிப்படுத்தும் வகையில், கொண்டுவரப்பட்ட இம்முக்கியத்துவம் வாய்ந்த சட்டம் நடைமுறையில் பெண்கள் பணிபுரியும் இடங்களை அவர்களுக்கான பாலியல் வன்முறையற்ற தளமாக உருவாக்குவதை நோக்கமாக கொண்டது குறித்து அலுவலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருப்பாய் பெண்ணே நெருப்பாய் எனும் தலைப்பில் 181 பெண்கள் உதவி எண், அச்சம் தவிர் ஆண்மை தவறேல், இழைத்தல் இகழ்ச்சி உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டார்.

மேலும் பெண் பாதுகாப்பு குறித்தும், பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குறித்தான கருத்தரங்கம் 'ஆண்மைதவரேல்' 'இழைத்தல் இகழ்ச்சி' எனும் தலைப்பின்கீழ் அலுவலர்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அரசு அலுவலர்கள் பாலியல் வன்கொடுமைகள் தொடர்பான தங்களை புகார்களை தெரிவிக்கும் வகையில் புகார் பெட்டியின் சேவையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்து, பணியிடங்களில் பெண்களுக்கு ஏதேனும் பாலியல் ரீதியான தொந்தரவு ஏற்படும் பட்சத்தில் தயங்காமல் இப்புகார் பெட்டியில் தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கருத்தரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 10 Dec 2021 9:48 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    எவரெஸ்ட், MDH மசாலாப் பொருட்களை நேபாளத்தில் விற்பனை செய்ய தடை
  2. நாமக்கல்
    கொல்லிமலையில் ஜவகர் சிறுவர் மன்ற கோடைகால கலை பயிற்சி
  3. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  4. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  8. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்