/* */

அரியலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டகுழு உறுப்பினர் டி. தண்டபாணி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

HIGHLIGHTS

அரியலூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா
X

அரியலூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது.

அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகம் முன்பு சுதந்திர தினத்தையொட்டி தேசிய கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றிய செயலாளர் து.பாண்டியன் முன்னிலை வகிக்க , ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு உறுப்பினருமான டி. தண்டபாணி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

நிகழ்ச்சியில் ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச் செயலாளரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டகுழு உறுப்பினருமான டி. தண்டபாணி பேசுகையில் இந்தியாவை அடிமைப்படுத்தி வந்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை வெளியேற்றிட நமது முன்னோர்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் போராடி பல இன்னுயிர்களை தியாகம் செய்து போராடி பெற்ற இந்திய சுதந்திரம் 75 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்று வகுப்புவாத பாசிசம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்ற சமூக மற்றும் வாழ்க்கை நெருக்கடி சூழ்நிலையில் மக்கள் அவதியுற்று வரும் இன்னல்களை போக்கிட சுதந்திர தினமான இன்றைய தினத்தில் அனைவரும் சபதமேற்போம் என்று கூறினார்.

விழா நிகழ்ச்சியில் சி.பி.ஐ. மாவட்ட செயலாளர் சொ. ராமநாதன், திருமானூர் ஜி. ஆறுமுகம், மு.கனகராஜ், அரியலூர் நகரம் மகளிர் சுய உதவி குழு பொ.சின்னப்பொண்ணு ,பெ.லட்சுமி,க. அமிர்தம்,க.சுபர்னா ,கு.வெள்ளையம்மாள், ஆர். காமாட்சி, அபினயபாரதி, இளைஞர் பெருமன்றம் ஆர்.ஆனந்து, கு,விக்னேஷ்,ஆர். கேசவன்,நந்தா அரியலூர் நகராட்சி மா. ராமசாமி அரியலூர் நகரக் கிளை ந. கோவிந்தசாமி உள்பட பலர் திரளாக கொடியேற்று விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Updated On: 15 Aug 2022 10:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது