/* */

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.

HIGHLIGHTS

ஜெயங்கொண்டம் அருகே விழப்பள்ளம் கிராம ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
X
சீறிப்பாய்ந்த காளையை இளைஞர் ஒருவர் அடக்கினார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள விழப்பள்ளம் கிராமத்தில் புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இதில் அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 600 காளைகள் கலந்து கொண்டுள்ளன. காளைகளை கட்டி தழுவி அடக்க 200 காளையர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

அலங்கரித்துக் கொண்டு வரப்பட்ட காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகள் வாடி வாசல் முன்பு குழுமியிருந்த காளையர்கள் போட்டி போட்டு அடக்கினர்.


காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் காளையர்களுக்கு அடங்காமல் சீறி பாய்ந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் குத்து விளக்கு, சைக்கிள், சில்வர் அண்டா, குடம், சேர்,கட்டில்,பணமுடிப்பு, தங்க நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

போட்டியின் போது காயமடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களும் அரசின் வழிகாட்டுதல் படி பரிசோதனை செய்த பின்னரே களத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

போட்டியின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 28 April 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. போளூர்
    ஜவ்வாது மலையில் பலாப்பழம் விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  7. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  9. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  10. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்