/* */

நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை

நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு முழுஉடல் பரிசோதனை முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து பார்வையிட்டார்

HIGHLIGHTS

நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை
X

அரியலூர் மாவட்டத்தில் நியாயவிலைக்கடைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து பார்வையிட்டார். அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளில் பணியாற்றி வரும் பணியாளர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றைய தினம் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நியாய விலைக்கடைப் பணியாளர்களுக்கு முழு உடல் பரிசோதனை முகாமினை மாவட்ட மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி துவக்கி வைத்து, பார்வையிட்டார்.

அரியலூர் மாவட்டத்தில் 263 முழு நேர நியாய விலைக்கடைகளும், 184 பகுதி நேர நியாய விலைக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதில் 210 விற்பனையாளர்களும், 12 இதர பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் முழு உடல் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் பரிசோதனை, இதய நோய் பரிசோதனை உள்ளிட்ட அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், தேவைப்படும் நபர்களுக்கு மருந்து, மாத்திரைகள் மற்றும் மேல் சிகிச்கைக்கு பரிந்துரை செய்யப்படும். இம்முகாமில் தினமும் 25 பணியாளர்கள் வீதம் முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே. இம்மருத்துவ முகாமினை கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உரிய முறையில் பயன்படுத்தி மருத்துவ பரிசோதனை செய்து நோயற்ற நல்வாழ்வு வாழ வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ம.தீபாசங்கரி, அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், துணைப்பதிவாளர்கள் ஜெயராமன், அறப்பள்ளி, கூட்டுறவு சார்ப்பதிவாளர்கள் மற்றும் நியாயவிலைக்கடைப் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 9 April 2022 4:53 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  2. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!
  3. அரசியல்
    அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ்? ஆர்.பி.உதயகுமார் காட்டம்..!
  4. தமிழ்நாடு
    கோவாக்சின் போட்டவர்களும் தப்ப முடியாதாம்..! புதிய வதந்தி..!
  5. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை...
  7. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் பறிமுதல்..!
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    வாசவி அம்மன் ஜெயந்தி விழா..!
  9. நாமக்கல்
    நிதி நிறுவன ஊழியரை தாக்கி வழிப்பறி- வாலிபர் கைது: சிறுவன் உட்பட 3...
  10. கலசப்பாக்கம்
    திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி..!