/* */

அரியலூர்: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் செய்ய கலெக்டர் வேண்டுகோள்

அரியலூர் மாவட்டத்தில் அவ்வையார் விருது பெற விரும்புவோர் விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

அரியலூர்: அவ்வையார் விருதுக்கு விண்ணப்பம் செய்ய கலெக்டர் வேண்டுகோள்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

உலக மகளிர் தின விழா ஆண்டு தோறும் மார்ச் 8ல் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 2012 முதல் மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் போது, பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது தமிழக முதலமைச்சரால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதுக்கு ரொக்கப்பரிசு, தங்க பதக்கம், சான்று மற்றம் சால்வை வழங்கப்படும்.

இவ்வாண்டிற்கான உலக மகளிர் தின விழா 08.03.2022ஆம் நாளன்று கொண்டாடப்படும்போது, அவ்வையார் விருது வழங்கப்படவுள்ளதால் தமிழகத்தை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும், சமூக நலனைச் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம், போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுவராக இருக்கும் பெண்கள் விண்ணப்பம் செய்யலாம். 24.12.2021-க்குள் மாவட்ட ஆட்சியர் வளாகம்,அறை எண்:20, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாக வந்து விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 16 Dec 2021 8:12 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு