/* */

70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்

நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை தேசிய பூங்காவில் விடுவித்த பிரதமர் மோடி வரலாற்றுச் சிறப்புமிக்கது என கூறினார்கூறுகிறார்

HIGHLIGHTS

70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் மீண்டும் சிறுத்தைகள்
X

கடந்த காலத்தில் இந்தியா ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது, ஆனால் 1952 ஆம் ஆண்டளவில் இந்த இனம் உள்ளூரில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அவை இப்போது ஈரானில் மட்டுமே காணப்படுகின்றன.

இந்தியாவில், வேட்டையாடுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 'சீட்டா' ரக சிறுத்தை இனம் அழிந்து விட்டது. இந்த சிறுத்தை இனம் முற்றிலும் அழிந்து விட்டதாக கடந்த 1952-ம் ஆண்டு அரசு அறிவித்தது.

அதே நேரம் இந்த சிறுத்தை இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்காக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவில் இருந்து சிறுத்தைகள் பெறுவதற்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி 8 சீட்டா ரக சிறுத்தைகளை இந்தியாவுக்கு நமீபியா வழங்கியது. அதன்படி 5 பெண் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் அடங்கிய இந்த குழு, விமானம் மூலம் நமீபியாவில் இருந்து இன்று ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு சரக்கு விமானத்தில் கொண்டு வரப்பட்டது.

ஜெய்ப்பூருக்கு வந்துள்ள இந்த சிறுத்தைகள் பின்னர் அங்கு இருந்து ஹெலிகாப்டரில் மத்திய பிரதேசத்தின் குணோ தேசிய பூங்காவுக்கு கொண்டு செல்லப்பட்டது . இந்த 8 சிறுத்தைகளில் 3 சிறுத்தைகளை குணோ தேசிய பூங்காவில் பிரதமர் மோடி இன்று விடுத்தார்.தொடர்ந்து சிறுத்தைகளை பிரதமர் மோடி போட்டோ எடுத்து மகிழ்ந்தார்.


பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் மத்தியப் பிரதேசத்திற்கு இதை விட பெரிய பரிசு எதுவும் இல்லை என்று மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்,

செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க அனைத்து சிறுத்தைகளிலும் ரேடியோ காலர்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிறுத்தையின் பின்னாலும் ஒரு பிரத்யேக கண்காணிப்புக் குழு உள்ளது, அது 24 மணி நேரமும் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும்.

Updated On: 18 Sep 2022 12:19 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...