தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு

தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
X
மாகரல் கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே மாகர்ல கிராமத்தில் வசித்து வருபவர் அசோக் இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி சுவாதி இந்த தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தையும் மூன்று வயது பெண் குழந்தை லக்க்ஷிதா ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் நேற்று இரவு சிறுமியின் தாய் சுவாதியுடன் உணவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியல் ஆரைக்கு சென்று கை கழுவி விட்டு சுவாதி வீட்டுக்குள் வந்துவிட்டார். தாய்பின் பின் சென்ற சிறுமி லக்க்ஷிதா குளியலருகே இருந்த தண்ணீர் தொட்டியில் இறங்கி உள்ளார். அதில் தண்ணீர் அதிக அளவில் இருந்த காரணத்தினால் குழந்தை தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

வீட்டிற்குள் சென்று குழந்தையை தேடி பார்த்த சுவாதி தண்ணீர் தொட்டி அருகே வந்து தேடிப் பார்த்தபோது சிறுமி தண்ணீரில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக மீட்டு பூச்சி அத்திப்பட்டு கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே வரும் வழியிலே இருந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து வெங்கல் காவல் நிலையத்தில் அளித்த தகவலின் பேரில் போலீசார் சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்