/* */

tamil serial actors-இயக்குனர் பாரதிராஜா அண்ணன் மகன் சீரியல் நடிகர் தெரியுமா..? நடிகர்களை தெரிஞ்சுக்கோங்க..!

tamil serial actors-தமிழ் சீரியலில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சில நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகின்றனர்.

HIGHLIGHTS

tamil serial actors-இயக்குனர் பாரதிராஜா அண்ணன் மகன் சீரியல் நடிகர் தெரியுமா..? நடிகர்களை தெரிஞ்சுக்கோங்க..!
X

tamil serial actors-டிவி சீரியல் நடிகர்கள் (கோப்பு படம்)

tamil serial actors-தமிழ் சீரியல் இயக்குனர்கள் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தே கதை பின்னுகிறார்கள். அதேபோல ஹீரோயின் மற்றும் அவருக்கு ஒரு வில்லி கேரக்டர் என கதை விளையாடும். ஆண்கள் பொதுவாகவே வாய் பேசாத மடந்தை போல அமைதியாக இருப்பார்கள். எப்போதாவது ஓரிரு வார்த்தை பேசினாலும், இடையில் புகுந்து ஹீரோயின் அல்லது வில்லி பேச்சை தடைசெய்துவிடுவார்கள்.

இருப்பினும் சில சீரியல்களில் ஆண்களையும் பேச வைக்கிறார்கள். தற்போது அந்த ட்ரெண்ட் வந்துள்ளது. அப்படி தமிழ் சீரியல்களில் நடித்து வரும் முக்கிய நடிகர்களை இங்கு பார்ப்போம், வாங்க.


கிருஷ்ணா

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியலில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி புகழ் பெற்றவர்.


பிரகாஷ் ராஜன்

இவரும் தெய்வத்திருமகள் சீரியலில் கிருஷ்ணாவுக்கு சகோதரராக சிறப்பாக நடித்து புகழ்பெற்றார்.


வேணு அரவிந்த்

இவர் நீண்ட காலமாக டிவி உலகில் கோலோச்சி வருகிறார். கே.பாலசந்தர் சீரியலில் நடித்தவர். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான அலைகள் சீரியலில் நெகட்டிவ் பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர்.

tamil serial actors


அப்சர்

இவரும் நீண்ட காலமாக சீரியல் உலகில் நடித்து வருபவர். இவர் பலதரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்திருப்பார். செல்வி, அகல்யா போன்ற சீரியல்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. தற்போது சன் டிவி சீரியல் பொம்மலாட்டத்தில் நடித்து வருகிறார்.


விக்னேஷ் குமார்

இவர் வாணி ராணி மூலமாக அறிமுகம் ஆனவர். வாணியின் மகனாக நடித்த இவரும் பேசப்படுபவர்.

tamil serial actors


சாய் கிரண்

இவர் தெலுங்கு சீரியலில் நடித்து வந்தவர். ஆனாலும் தமிழ் சீரியலிலும் அவரது திறமையைக் காட்டி நடித்து வருகிறார். அவரது நடிப்பு வம்சம் சீரியலில் பெரிதும் பேசப்பட்டது.


ஸ்டாலின்

இவர் தமிழ் சீரியலில் மிகவும் அறிமுகமான ஒரு நடிகர். பாரதிராஜாவின் தெற்கத்திப்பொண்ணு சீரியலில் அறிமுகம் ஆனார். விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி மற்றும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாசமலர் சீரியலிலும் நடித்து வருகிறார்.

இவர் இயக்குனர் பாரதிராஜாவின் அண்ணன் மகன் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.


பப்லூ பிரித்விராஜ்

இவர் தமிழ் சினிமாவில் நடித்து நல்ல புகழ் பெற்றவர். எந்த கதாப்பாத்திரமாக இருந்தாலும் சிறப்பாக நடிப்பவர். வாணி ராணியில் ராணியின் கணவராக நடித்தார். அரசி, மர்மதேசம் போன்ற சீரியல்கள் அவரது திறமைக்குச் சான்றுகள்.


கார்த்திக்

விஜய் டிவியில் வெளிவந்த கனா காணும் காலங்கள், கல்லூரியின் காதல் போன்ற சீரியல்கள் பெயர் பெற்றவை. பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான செம்பருத்தி அவருக்கு பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தியது. தற்போது கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்.


மிதுன் தேஜஸ்வி

இவர் சீரியல் நடிப்பதற்கு முன்னர் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடியவர். தற்போது சன் டிவி சீரியல் அபூர்வ ராகங்களில் நடித்து வருகிறார்.

Updated On: 20 Jan 2023 7:25 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!