/* */

அமெரிக்க கிரீன்கார்டு வேண்டுமா? வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் நிம்மதி

லட்சக்கணக்கானோருக்கு 'கிரீன் கார்டு' வழங்க அனுமதி வழங்கும் மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

அமெரிக்க கிரீன்கார்டு வேண்டுமா?  வெளிநாட்டில் இருந்து குடியேறியவர்கள் நிம்மதி
X

US green card-அமெரிக்க கிரீன் கார்டு.(கோப்பு படம்)

அமெரிக்காவில் குடியேறியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட பிற நாட்டவர்கள் அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கு வழங்கப்படும் ஆவணம், 'கிரீன் கார்டு' என அழைக்கப்படுகிறது. இந்த 'கிரீன் கார்டு' அமெரிக்காவில் வசிக்கிற வெளிநாட்டவர்க்கு பல்வேறு நன்மைகளைச் செய்கிறது. ஆனால் சமீப காலமாக இது கிடைப்பதில் கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகின்றன.

இந்தநிலையில் அமெரிக்காவின் 'எச்-1பி' விசா மற்றும் நீண்ட கால விசா வைத்திருப்போர் 'கிரீன் கார்டு' பெற ஏதுவான சட்ட மசோதாவை அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளும் ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் அலெக்ஸ் பாடில்லா, எலிசபெத் வாரன், பென் ரே லுஜான், கொறடா டிக் டர்பின் ஆகியோர் கொண்டு வந்தனர். இதுபற்றி அலெக்ஸ் பாடில்லா கூறும்போது, "காலாவதியாகிப்போன நமது குடியேற்ற அமைப்பு, எண்ணற்ற மக்களை பாதிப்புக்குள்ளாக்குகிறது, அமெரிக்க பொருளாதாரத்தையும் பாதிக்கிறது. எங்கள் மசோதா, 35 ஆண்டுகளில் முதல்முறையாக பதிவேடு கட்-ஆப் தேதியை புதுப்பிக்கும். இதனால், அதிகமான அளவில் புலம் பெயர்ந்தோர் சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை grகோரி விண்ணப்பிக்கலாம்" என தெரிவித்தார். "இந்த மசோதா லட்சக்கணக்கான புலம் பெயர்ந்தோர் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். பல்லாண்டு காலமாக அமெரிக்காவில் வாழ்ந்து, வேலை செய்து, பங்களிப்பு செய்கிறவர்கள் நிச்சயம் எதிர்காலம் குறித்த அச்சம் இன்றி சுதந்திரமாக வாழ வழிபிறக்கும" என்றும் குறிப்பிட்டார்.

இந்த மசோதா பிரதிநிதிகள் சபையில் ஜோ லோப்கிரென் என்ற எம்.பி.யால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தொடர்ந்து குறைந்தது 7 ஆண்டுகள் வசித்து வருபவர்களுக்கு கிரீன் கார்டு கிடைக்க இந்த மசோதாவில் வகை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதாவை அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டு 'கிரீன் கார்டு' வழங்கப்படாதா என்று அமெரிக்காவில் ஏங்கிக்கொண்டிருக்கும் வெளிநாட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கிடையே அமெரிக்க விசாவுக்கு இந்தியர்கள் 833 நாட்கள் காத்திருக்க வேண்டியதிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இருப்பினும் உலகம் முழுவதும் இருந்து அமெரிக்காவில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் பலருக்கு கிரீன் கார்டு கிடைக்காதா என்று ஏங்கிக்கிடந்தனர். அவ்வாறான மக்களுக்கு இந்த கிரீன் கார்டு திட்டம் நல்ல பலனைத்தரும் என்பதால் இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Updated On: 2 Oct 2022 11:02 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    பாக்கு மரத்தில் கோடையில் பூச்சி நோய் கட்டுப்பாடு: 9ம் தேதி இலவச...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற...
  4. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  6. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  7. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  8. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  9. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  10. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு