அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற யானை

அந்தியூர் அருகே பர்கூரில் தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற யானை
X

தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து சென்ற யானையை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு வீட்டின் முன்பு தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு சென்றது.

அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு வீட்டின் முன்பு தொட்டியில் இருந்த தண்ணீரை குடித்து விட்டு சென்றது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. கடந்த சில தினங்களாக 110 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

மாவட்டத்தில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

இந்த நிலையில், அந்தியூர் அருகேயுள்ள பர்கூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை பர்கூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் அங்குள்ள வீட்டின் முன்பு இருந்த தண்ணீர் தொட்டிக்குள் துதிக்கையை விட்டு தண்ணீரை குடிக்க தொடங்கியது.

இதை கண்டதும் கிராம மக்கள் ஒன்று திரண்டு வாகனங்கள் மூலம் ஒலி எழுப்பியும், கூச்சலிட்டும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானை எதையும் கண்டு கொள்ளாமல், தொட்டியில் இருந்த தண்ணீர் முழு வதையும் குடித்துவிட்டு அங்கிருந்து மெதுவாக வனப்பகுதிக்குள் சென்றது.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself