/* */

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம்விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

விருதுநகர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

விருதுநகர் மாவட்டம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் கோரிக்கைகளைக் கேட்டறிந்து உரிய விளக்கம் அளித்து தொடர் நடவடிக்கை எடுக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி மற்றும் முக கவசங்களை தவறாது அணிந்து ஒமிக்ரான் வைரஸிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து கண்மாய் மற்றும் பிற நீர்நிலைகளிலும் மழைநீர் நிறைந்து பாசனத்திற்கு போதுமான அளவு நீர் சேகரம் செய்திட உழைத்த வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் காட்டுப்பன்றியினால் பயிர்கள் அதிக அளவில் சேதமடைவதை கட்டுப்படுத்தும் பொருட்டு அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி மற்றும் இராஜபாளையம் வட்டாரங்களில் 10 விவசாயிகளுக்கு காட்டுப்பன்றி விரட்டி மற்றும் அதன் பயன்பாட்டினை விளக்கும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் அட்டை விண்ணப்பித்த விவசாயிகளுக்கும் புதிய விவசாய கடன் அட்டை(KCC) வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்டத்தில் 22 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வத்திராயிருப்பு வட்டாரத்தில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் விவசாயிகள் மட்டுமே நெல் விற்பனை செய்யும் வகையிலும் அனைத்து ஆவணங்களுடன் e-Portalல் முன்கூட்டியே பதிவு செய்து கொள்முதல் செய்யப்படும் விபரங்கள் விவசாயிகளுக்கு விளக்கி கூறப்பட்டது.

வடகிழக்கு பருவமழையினால் பாதிப்படைந்த விவசாயிகள் விபரம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு 447 விவசாயிகளுக்கு 27,32,000/- ரூபாய்க்கு நிவாரணம் கேட்டு அரசுக்கு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொட்டாஷ் உரத்தட்டுப்பாட்டினை கண்காணித்திட வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறைவேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு உள்ள இடங்களில் விற்பனை தடை விதிக்கப்பட்டுள்ளது

அழகாபுரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் பெறப்பட்ட நகைக்கடன் முறைகேடு தொடர்பாக மாவட்ட ஆட்சியரின் நேரடி பார்வையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தரணி சர்க்கரை ஆலையில் 2018-19ம் ஆண்டுக்கான நிலுவைத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்கிடவும், வனவிலங்குச் சட்ட விதிமுறைகளின்படி காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்தவும் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் 2020-21ம் ஆண்டுகாப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீடு தொகை கணக்கிடப்பட்டு விரைவில் வழங்கப்படும் என்றும் காப்பீடு செய்யப்பட்ட மக்காசோளம், நிலக்கடலை, துவரை,பருத்தி, கேழ்வரகு, கம்பு ஆகிய பயிர்களின் சாகுபடி பரப்பினை விட அதிகமாக உள்ள ஒத்திசைவு பரப்பு கணக்கிடப்பட்டு சரி செய்யப்பட்டு அறிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் விரைவில் பயிர் காப்பீடு வழங்கப்படும் என்றும் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வேளாண்மை இணை இயக்குநர் உத்தண்டராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) சங்கர்.எஸ்.நாராயணன், இணைப்பதிவாளர்(கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் P.இராஜலட்சுமி, இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) ரவிச்சந்திரன், தோட்டக்கலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) சரஸ்வதி மற்றும் செயலாளர், விருதுநகர் விற்பனைக்குழு வேலுச்சாமி, மீன்வளத்துறை உதவி இயக்குநர் இராஜேந்திரன், உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்