/* */

விருதுநகரில் பெட்ராேல், டீசல் விலை உயர்வை கண்டித்து எம்பி நடைபயணம்

விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபயணம்.

HIGHLIGHTS

விருதுநகரில் பெட்ராேல், டீசல் விலை உயர்வை கண்டித்து எம்பி நடைபயணம்
X

விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபயணம் நடைபெற்றது.

விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபயணம் நடைபெற்றது

இந்த நடை பயணத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார். மேலும் இந்த நடை பயணத்தில் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நடைபயணம் எம்.ஜி.ஆர் சிலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது. இந்ந நடை பயணத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரவின்பேரில் விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை நடைபெற்றது. பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்த பாதயாத்திரை நடைபெற்றது.

எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என நீண்ட கால கோரிக்கையை அடுத்து 2015ல் அறிவிப்பாக வந்ததது பின்னர் 2019ல் பிரதமர் தோப்பூரில் அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது வரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெற வில்லை என குற்றம் சாட்டிய மாணிக்கம் தாகூர் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பிக்கள் அனைவரும் குரல் கொடுப்போம் என்றார். அதே சமயம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு சேர்க்கை நடைபெறாது எனவும் அடுத்த ஆண்டு தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது என்றார்.

பெட்ரோல் டீசல் மீது மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வரியை குறைக்க நிதி அமைச்சரிடமும் பிரதமர் மோடியிடமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வாரா என கேள்வி எழுப்பிய மாணிக்கம் தாகூர் அண்ணா மலையை பொறுத்தமட்டில் உண்மையிலேயே தமிழக மக்கள் மீது அன்பு இருந்தால் பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவாறு பெட்ரோல் மீது இருந்த வரியை கொண்டு வர வேண்டும் எனவும் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 32 ரூபாய் வரி விதிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்றார். மற்ற மாநிலங்களில் உள்ள மக்களை போல் தமிழக மக்களை முட்டாளாக்க பாஜக நினைத்தாள் அது நடைபெறாது என்றார். அரசு நிகழ்ச்சிகளில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வது நல்ல முடிவாக பார்க்கிறேன் என்றார்.

தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளின் பிரச்சினைகளை கேட்பதற்கு யாரும் இல்லாத காரணத்தால் தான் குழந்தைகள் தற்கொலைக்கு தள்ளப் படுகிறார்கள் என்றார். குழந்தைகளின் பிரச்சனைகளை பெற்றோர்கள் கேட்க வேண்டும் என்றார். இப்போது நம்முடைய சமூகத்தில் குடும்பத்தினர் வெளியே பேசும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது என்றார். ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியை பற்றி விமர்சனம் செய்தது மிகவும் கீழ்த்தரமானது என்றார். மேலும் எந்தப் பெண்ணைப் பற்றியும் சட்டமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது என்றார் ஜெகன்மோகன் ரெட்டி இந்த மாதிரி நடந்து கொள்வது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கும் என்றார்.

பருவமழையின் வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினர் ஐ தமிழக அதிகாரிகள் சரியான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றார். மத்திய அரசு பாரபட்சமாக நடக்கிறது என்றார். மேலும் பேசிய மாணிக்கம் தாகூர் வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர் யாரும் வரவில்லை என குற்றம்சாட்டினார். தமிழர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்னை மற்றும் கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட வராது மோடி அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது என்றார். மேலும் மத்திய குழுவினர் நேர்மையான முறையில் ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை தமிழக அரசுக்கு பெற்றுத் தர வேண்டும் என்றார்.

பாஜகவை பொருத்தமட்டில் மக்கள் விரோதிகளாக தொடர்ந்து சித்தரிப்பதற்கு அவர்களின் நடவடிக்கை தான் காட்டுகிறது என்றார். மேலும் பாஜகவை பொருத்தமட்டில் மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களையும் மக்களை முட்டாளாக்கும் நினைப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் என்றார் அதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

Updated On: 22 Nov 2021 3:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!