/* */

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜுனத் அகமதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி

திமுகவைச் சேர்ந்த ஜூனத் அகமது நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு: ஜுனத் அகமதுவின் ஜாமீன் மனு தள்ளுபடி
X

விருதுநகர்: கடந்த மாதம் விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் திமுகவைச் சேர்ந்த ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேர் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழ்நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதற்கு அதிமுகவினர் சட்டபேரவையில் கண்டனம் தெரிவித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மதுரை மத்திய சிறை: அதைத்தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 8 பேர் மீதும் சிபிசிஐடி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன், ஜூனத் அகமது உள்ளிட்ட 4 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி, 7 நாட்கள் விசாரணை செய்து மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்களுக்கு அடுத்த மாதம் மே 2ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கிய நிலையில் மீண்டும் மதுரை மத்திய சிறையில் நால்வரையும் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்

பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜாமீன் மனு: பள்ளி சிறுவர்கள் 4 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் 2ஆவதாக குற்றம்சாட்டப்பட்ட திமுகவைச் சேர்ந்த ஜூனத் அகமது என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் தனக்கு ஜாமீன்கோரி, கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்தார்.

ஜாமீன் மனு தள்ளுபடி: இந்த ஜாமீன் மீதான விசாரணை கடந்த 21ஆம் தேதி வந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வழக்கை ஏப்.26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார். அதன் படி, இன்று (ஏப்.26) விசாரணைக்கு வந்த ஜூனத் அகமதுவின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில், அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

Updated On: 27 April 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  2. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  3. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  5. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  6. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  7. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு
  8. லைஃப்ஸ்டைல்
    புரதச் சத்துக்களைத் தவிர்க்க மக்களை வலியுறுத்தும் ஐசிஎம்ஆர் மருத்துவக்...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி முக்கொம்பு மேலணையின் ஷட்டர் பழுதுபார்ப்பு பணி துவக்கம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் இலவச இருதய மருத்துவ முகாம்..!