/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி 1,150 இடங்களில் சிலைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,150 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு
X

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்த அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் உற்சவர் விநாயகர்.

திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விநாயகா் சதுா்த்தி விழா நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அருணாசலேஸ்வரர் கோவிலில் 3-ம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்மந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி உற்சவர் விநாயகர் கோயில் மாட வீதிகளில் வளம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்

திருவண்ணாமலை நகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இந்து அமைப்புகள், பல்வேறு சங்கங்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் வித, விதமாக பிரம்மாண்டமாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தது.

பல்வேறு இடங்களில் 10 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலைகள் அனுமதி பெறப்பட்டு வைத்து பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள 1150 சிலைகளுக்கு போலீசாரும் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விநாயகர் சிலைகள் ஊர்வலம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. திருவண்ணாமலையில் நாளை மாலையில் நடைபெற உள்ளது. காந்தி சிலை அருகே விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலம் புறப்படுகிறது. அந்த சிலைகள் தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரை குளத்தில் கரைக்கப்பட உள்ளன.

அதேபோல் வந்தவாசி மற்றும் செய்யாறில் வருகிற 3-ந் தேதியும், ஆரணியில் 4-ந் தேதியும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தாமரைக்குளம், சிங்காரப்பேட்டை ஏரி, கோணிராயன்குளம், வந்தவாசி 5 கண் வாராபதி, பூமா செட்டிகுளம், போளூர் ஏரி ஆகிய நீர் நிலைகளில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் வழிகாட்டுதல் படி சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் 200 பயிற்சி போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 1 Sep 2022 12:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  3. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  4. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  7. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  8. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  9. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  10. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்