/* */

திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்

திருவண்ணாமலை மாவட்ட கோயிலில் பாதுகாப்பு பணியில் சேர முன்னாள் படைவீரர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட கோயில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோயில்களில் பாதுகாப்பு பணிக்காக 101 பாதுகாவலர்கள் பணிக்கு முன்னாள் படைவீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்முன்னாள் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் சிறப்பு காவலர்களாக பணிபுரிவதற்கு நல்ல ஆரோக்கியமும் திறமையும் மற்றும் 62. வயதிற்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும்.40 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருப்பின் நல்லது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு பணிக்கு 101 காலி பணியிடங்கள் உள்ளன. கோயில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமும் மற்றும் தகுதியுள்ள முன்னாள் படைவீரர்கள் கோவில்களுக்கு அருகில் வசிப்பவராக இருத்தல் நல்லது.

பணி புரிய விருப்பம் உள்ள முன்னாள் படைவீரர்கள் கீழ்காணும் ஆவணங்களுடன் அசல் சான்று, நகல் அடையாள அட்டை, நகல் கைபேசி எண், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆகியவற்றுடன் தங்களது பெயரினை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Updated On: 21 April 2022 7:12 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?