/* */

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அலைமோதிய  பக்தர்கள் கூட்டம்
X

நள்ளிரவு கிரிவலம் வந்த பக்தர்கள், இராஜ‌கோபுரம் முன் தீபம் ஏற்றி வணங்கி சென்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் இரவு, 10.30 மணிக்கு தொடங்கி நேற்று இரவு 11.30 மணி அளவில் நிறைவடைந்தது. இந்த மாதமும் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகத்தினால் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் பக்தர்கள் நேற்று முன்தினம் மாலையில் இருந்தே தனித் தனியாக கிரிவலம் செல்ல தொடங்கினர்.

இந்த நிலையில் நேற்று மாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.அவர்கள் வழக்கம்போல் 14 கி.மீ. தூரம் நடந்து சென்று கிரிவலம் வந்தனர். கிரிவலப்பாதையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போதும் பக்தர்கள் கிரிவலம் செல்ல தடை விதிக்கவில்லை. தனால் மிகவும் உற்சாகமுடன் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.அதேபோல், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

Updated On: 17 Feb 2022 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்