/* */

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் ஆங்கில பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு
X

திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பெருவழுதி சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்

வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட ஆங்கில பேராசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

ஆங்கில பேராசிரியர்களுக்கு நடைபெறும் பணியிடை 2 நாள் பயிற்சி வகுப்பினை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

முன்னதாக கல்லூரி ஆங்கிலத்துறை தலைவர் சிவப்பிரியா பயிற்சிக்கு வருகை தந்த வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கல்லூரி பேராசிரியர்களை வரவேற்று பயிற்சியின் அவசியம் குறித்தும் பயிற்சியின் மூலம் பேராசிரியர்களும் மாணவர்களும் பெரும் கல்வியறிவு குறித்தும் பேசினார்.

பயிற்சி வகுப்பில் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் பெருவழுதி சிறப்பு பயிற்சியாளராக கலந்துகொண்டு கிராமப்புற மாணவர்கள் தங்கள் வாழ்வில் மேம்பட அவர்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த பயிற்சியில் பங்கேற்பதன் மூலம் பேராசிரியர்கள் தங்களையும் மேம்படுத்திக்கொண்டு மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்த வேண்டுமென உரையாற்றினார்.

கல்லூரியின் புள்ளியியல் துறை தலைவர் பாலமுருகன் இந்த பயிற்சி வகுப்பு நடத்துவதன் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார்.இறுதியாக கல்லூரி உதவி பேராசிரியை அறிவுச் செல்வி நன்றி கூறினார்.

Updated On: 6 May 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?