/* */

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்
X

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர்  எ.வ.வேலு, தீர்மானங்களை விளக்கி பேசினார். 

திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேணுகோபால் தலைமை தாங்கினார். தணிக்கை குழு உறுப்பினரும், சட்டபேரவை துணை தலைவருமான பிச்சாண்டி எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட அவைத்தலைவர் சீதாபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் வரவேற்றார். கூட்டத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தீர்மானங்களை விளக்கி பேசினார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீ்ர்மானங்கள் விவரம் வருமாறு:

திருவண்ணாமலையில் கடந்த 8-ம் தேதி அண்ணா நுழைவு வாயில் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை ஆகியவற்றை திறந்து வைக்க வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு மாவட்ட கழகம் சார்பில் நன்றி தெரிவிப்பது, கடந்த 9-ம் தேதி அன்று திருக்கோவிலூர் சாலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தும், 246 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது, கீழ்பென்னாத்தூரில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் 2 லட்சமாவது மையத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கழக மருத்துவரணி துணைத்தலைவர் கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் கிரி, அம்பேத்குமார், சரவணன், ஜோதி, பொருளாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் பாரதிராமஜெயம், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் கருணாநிதி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனுவாசன், தெற்கு மாவட்ட அமைப்பாளர்கள் மனோகரன், நேரு, முத்து, ஜீவானந்தம், ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சுந்தரபாண்டியன், மெய்யூர் சந்திரன், ஆறுமுகம், ராமஜெயம், பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வடக்கு மாவட்ட துணை செயலாளர் லோகநாதன் நன்றி கூறினார்.

Updated On: 21 July 2022 1:07 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!