/* */

பஞ்சரதங்களை சீரமைக்கும் பணி திருத்தேர் ஸ்தபதி ஆய்வு

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பஞ்சரதங்களை சீரமைக்கும் பணி திருத்தேர் ஸ்தபதி ஆய்வு
X

திருத்தேர்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்த அதிகாரிகள்

தீபத் திருவிழாவை முன்னிட்டு திருத்தேர்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மாட வீதியில் வலம் வரவுள்ள திருத்தேர்களின் உறுதி தன்மை குறித்து தமிழ்நாடு திருத்தேர் ஸ்தபதி கஜேந்திரன் மற்றும் மண்டல ஸ்தபதி கண்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா, அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவின் நிறைவாக, 26ம் தேதி அதிகாலை பரணி தீபமும் அன்று மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும்.

கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் 7ம் நாளன்று (23ம் தேதி) மாட வீதியில் பஞ்ச ரதங்கள் பவனி நடைபெறும். அதையொட்டி, தேரோட்டத்தின் தொடக்கமாக விநாயகர் தேர் பவனி நடைபெறும். அதைத்தொடர்ந்து, சுப்பிரமணியர் தேர், சுவாமி தேர் எனப்படும் மகா ரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவை அடுத்தடுத்து மாட வீதியில் பவனி வரும். அதையொட்டி, பஞ்ச ரதங்களையும் பழுது நீக்கி, சீரமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது.

அதன்படி, தேரடி வீதியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர், மகா ரதம் எனப்படும் பெரிய தெர், அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் ஆகியவற்றில் இருந்த பழுதுகள் கண்டறியப்பட்டு சீர் செய்யப்படுகிறது. சண்டிகேஸ்வரர் தேருக்கு புதிய சக்கரங்கள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில், பஞ்சரதங்களை சீரமைக்கும் பணியை நேற்று மாநில திருத்தேர் ஸ்தபதி திருமழிசை கஜேந்திரன், மண்டல ஸ்தபதி கண்ணன் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். தேர்களில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.

அப்போது, கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள் மற்றும் அறநிலையத்துறை பொறியாளர்கள் உள்ளிட்டோர் உடனடிருந்தனர். பஞ்ச ரதங்கள் சீரமைக்கும் பணி தொடர்பாக, ஸ்தபதிகள் ஆலோசனைகளை ஏற்று, அதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

Updated On: 2 Nov 2023 2:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?