/* */

திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20-ந் தேதி நடக்கிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அரசு பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கும் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) விளையாட்டுப் போட்டி நடைபெற உள்ளது.

இதில் பங்குபெறும் மாணவிகள் போட்டிக்கு வரும்போது தலைமைஆசிரியர் கையொப்பமிட்ட போட்டிக்கான நுழைவு அனுமதி விண்ணப்பம் எடுத்து வர வேண்டும்.

இதில் தடகளம், கைப்பந்து, ஆக்கி, வாலிபால், கூடைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. தடகளத்தில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1500 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது.

ஒரு பள்ளியில் இருந்து ஒரு குழு போட்டியிலும், தடகள போட்டியில் ஒரு மாணவி 2 போட்டியிலும் கலந்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

Updated On: 18 Sep 2022 11:52 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  3. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.
  4. இராஜபாளையம்
    இராஜபாளையம் அருகே ,போலீஸாரிடமிருந்து தப்பிக்க முயன்றவர்களுக்கு கை,...
  5. லைஃப்ஸ்டைல்
    நகைச்சுவையான பிறந்தநாள் வாழ்த்துகளின் தொகுப்பு..!
  6. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  7. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  8. லைஃப்ஸ்டைல்
    50 அசத்தலான தமிழ் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு