/* */

ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு

பழங்குடியின மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்காததால் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவிகள் ஆட்சியரிடம் மனு

HIGHLIGHTS

ஜாதி சான்றிதழ் இல்லாததால் பழங்குடியின மாணவிகளின் உயர்கல்வி பாதிப்பு
X

ஜாதி சான்றிதழ் கேட்டு கலெக்டரிடம் மனு அளித்த மாணவிகள்

தண்டராம்பட்டு அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் வசிக்கும் மாணவி ரோகினி உள்ளிட்ட மாணவிகள் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், 'மலைவாழ் சமூகத்தை சேர்ந்த நாங்கள், மலையாளி பழங்குடியினர் (எஸ்டி) சமூகத்தில் உள்ளோம். எங்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்காததால், கல்வியை தொடர முடியவில்லை. மேலும், கல்வி ஊக்கத் தொகையும் பெற முடியவில்லை. உயர் கல்வியை படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எஸ்டி மலையாளி என ஜாதி சான்றிதழ் வழங்கினால், உயர்கல்வி படிக்க வழி பிறக்கும். புளியம்பட்டு, அருவங்காடு, கல்நாத்தூர், புதூர்செக்கடி ஆகிய கிராமங்களில் ஜாதி சான்றிதழுக்காக 50-ம் மேற்பட்ட மாணவர்கள் காத்திருக்கின்றனர். எங்களுக்கு மலையாளி எஸ்டி என ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளனர்.

Updated On: 14 Dec 2021 7:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...