/* */

புதிய பேருந்து நிலையம் அமைக்க வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு

புதிய பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தில் வசிப்போருக்கு மாற்று இடம் வழங்க வருவாய் அலுவலர் பேச்சு வார்த்தை.

HIGHLIGHTS

புதிய பேருந்து நிலையம் அமைக்க வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு
X

குடியிருப்பு வாசிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல்

திருவண்ணாமலை பேருந்து நிலையம் அமைய உள்ள தாக கூறப்படுகின்ற டான் காப் இடத்தில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு மாற்று இடம் தருவதாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில் திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் கலந்து கொண்டார்.

திருவண்ணாமலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்றும் அது திண்டிவனம் சாலையில் உள்ள டான் காப் இடத்தில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் எ. வ. வேலு, தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் அந்த நிலத்தில் மண் பரிசோதனை செய்வதற்காக கடந்த நகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் பேருந்து நிலையம் அமையும் அந்த இடத்தில் ஒரு பகுதியில் குடியிருப்புகள் அமைந்துள்ளன. பேருந்து நிலையம் அமைவதற்காக அந்த குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக அங்கு குடியிருப்பவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தரப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருந்தார். அவர்களுக்காக பல்லவன் நகர் அருகில் ஒரு புதிய மனை பிரிவு, அனைத்து வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் அங்கு வசிப்போருக்கு எந்த மனைகளை ஒதுக்க வேண்டும் என அறிவதற்காக திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வெற்றிவேல் முன்னிலையில் குடியிருப்புவாசிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Updated On: 30 Jun 2022 6:26 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    ராகுல் குறித்து கூறிய கருத்துக்கு ரஷ்ய செஸ் வீரர் கேரி காஸ்பரோவ்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  4. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  6. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  7. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  8. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  10. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு