/* */

இளம்பெண்ணை கற்பழித்து கொலை: இளைஞருக்கு இரட்டை ஆயுள்

தானிப்பாடியில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

HIGHLIGHTS

இளம்பெண்ணை கற்பழித்து கொலை: இளைஞருக்கு இரட்டை ஆயுள்
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகில் உள்ள குளத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் சதாம்உசேன் (வயது 36). இவர் கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 16-ந் தேதி அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த சுமார் 20 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை சே.ஆண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள மைதானத்தின் அருகில் உள்ள குளத்திற்கு தூக்கி சென்று கற்பழித்து உள்ளார். பின்னர் அவர் அந்த இளம்பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்து உள்ளார்.

இது குறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்தது சதாம்உசேன் என்பது தொியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திருவண்ணாமலை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் வீணாதேவி ஆஜரானார்.

இவ்வழக்கை நீதிபதி பார்த்தசாரதி விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்த வாலிபர் சதாம் உசேனுக்கு கற்பழிப்பு குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம், கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் என இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார்.

Updated On: 8 Sep 2022 8:57 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    4வது மாடியில் இருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் தற்கொலை
  2. ஆன்மீகம்
    சங்க தமிழ் மூன்றும் தருபவனே, விநாயகா..!
  3. சூலூர்
    கோவை அருகே கருமத்தம்பட்டியில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் :3 பேர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    இல்லத்தின் லட்சுமி..உள்ளத்தின் மகிழ்ச்சி நீ..! இனிய
  5. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  6. நாமக்கல்
    ஓட்டு எண்ணும் பணி முழுமையாக சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்யப்படும் :...
  7. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  9. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  10. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...