/* */

திருவண்ணாமலை அரசு பள்ளியில் 1500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

School Tree Plantation -திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அரசு பள்ளியில் 1500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
X

தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

School Tree Plantation -திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலைபிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 1,500 பனைவிதைகள் நடும் நிகழ்ச்சி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக்குமாரி, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வெங்கடேசன், பள்ளி செயலாளர் ஜான்வில்லிங்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தியாகி அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுற்றுச்சூழல் அருகில் 1500 பனை விதைகளை திருவண்ணாமலை நகர கழக செயலாளர், வெற்றி தமிழர் பேரவை தலைவர் கார்த்திக் வேல்மாறன், கலந்துகொண்டு பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார்.

அவர் பேசும்போது, தமிழ்நாட்டின் சின்னமான பனைமரம், தமிழகத்தில் பழம்பெரும் மரங்களில் ஒன்றான பனைமரம், எண்ணிக்கைகள் தற்போது குறைந்து வருகிறது. தற்போது இது போன்ற பள்ளி வளாகங்கள் மற்றும் பொது இடங்களில் பனை மரங்களை நடுதல் மூலம் நாம் பாரம்பரியத்தை பின்பற்றுவோம்.

மேலும் அதிக அளவில் பனை விதைகளை நட்டு பேணி காப்போம் என கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், தூய்மை அருணை காவலர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை அருணை சேவை மையம் தலைவர் ராமச்சந்திரன் செய்திருந்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Sep 2022 10:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?