/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்த உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் ஸ்கேன் மையங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று மகளிர் ஆணைய தலைவர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில் ஆய்வு நடத்த உத்தரவு
X

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமாரி நேரடி ஆய்வு மேற்கொண்டார்,

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்தசேவை மையத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி ,மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் ஆய்வு செய்து, மேலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை நிவர்த்தி காணும் விதத்தில் மருத்துவ உதவி, சட்ட உதவி உளவியல் ஆலோசனைகள், காவல்துறை உதவியுடன் மீட்பு மற்றும் தங்கு வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த மையத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

முன்னதாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் செய்யாறில் இயங்கி வரும் மாவா தொண்டு நிறுவனத்தின் பெண்கள், முதியோர் பாதுகாப்பு இல்லம் மற்றும் சுவாதார் கிரே பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் அடிப்படை வசதிகளை ஆய்வு மேற்கொண்டு அவர்களின் தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்..

இதனை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனும் ஆய்வுக்கூட்டம் நடத்தி ஆ லோசனைகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை சாா்பில், அனைத்துத்துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு மாநில மகளிா் ஆணைய தலைவா் குமரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கும் அனைத்து ஸ்கேன் மையங்களிலும் மருத்துவத்துறையினா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். சிசுவின் பாலினத்தை தெரிவிக்கும் ஸ்கேன் மையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெண் குழந்தைகள் கல்வி கற்பதன் அவசியம் குறித்து பெற்றோா்களுக்கு ஆசிரியா்கள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் 'மாணவா்கள் மனசு' என்ற புகாா் பெட்டிகளை அமைக்க வேண்டும். இந்தப் பெட்டியில் அளிக்கப்படும் புகாா் கடிதங்களை பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோா்கள் முன்னிலையில் திறக்க வேண்டும். பள்ளிக் குழந்தைகளின் இடைநிற்றலைக் கண்டறிந்து அவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும்.

மகளிா் திட்டம் மூலம் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகளை வழங்கி அவா்களை தொழில் முனைவோா்களாக உருவாக்க வேண்டும்.

181 கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாா் அளிக்கும் பெண்களின் பிரச்னைகளை பொறுமையுடன் கேட்டறிந்து காவல்துறை மூலம் உதவி செய்ய வேண்டும். சிறு வயது திருமணத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து பள்ளி மாணவிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் செயல்பாடுகள் குறித்து அந்தந்த துறை அலுவலா்களிடம் மாநில மகளிா் ஆணையத் தலைவா் குமரி கேட்டறிந்தாா்.

கூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலா் (பொ) சரண்யா மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 15 Jun 2024 2:26 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    சென்னை பீச்- திருவண்ணாமலை இடையே இயங்கும் ரயிலின் பயண நேரம் குறைக்க...
  2. இந்தியா
    மனைவி இறந்த சில நிமிடங்களில் துக்கம் தாளாமல் ஐபிஎஸ் அதிகாரி
  3. ஈரோடு
    ஈரோட்டில் விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற கார்: சிசிடிவி...
  4. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சொசைட்டியில் 420 மூட்டை பருத்தி ஏலம் மூலம்
  5. கோவை மாநகர்
    பொள்ளாச்சி தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு
  6. வணிகம்
    இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலம் யார் தெரியுமா..?
  7. கல்வி
    பூமியின் முதல் செல் எப்படித் தோன்றியது..? இந்திய விஞ்ஞானிகள்...
  8. நாமக்கல்
    எருமப்பட்டியில் நாளை, நாமக்கல்லில் 20ம் தேதி மின்சார நிறுத்தம்...
  9. நாமக்கல்
    கூடுதல் கட்டணம் வசூலித்த தனியார் பஸ் பர்மிட்டை ஏன் ரத்து...
  10. சுற்றுலா
    ஜாலியா ஒரு டூர் போவோமா..? மனசு லேசாகும்ங்க..!