/* */

திருவண்ணாமலையில் ஆவின் புதிய நிர்வாக அலுவலகம் திறப்பு

திருவண்ணாமலையில் ஆவின் புதிய நிர்வாக அலுவலகத்தை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் ஆவின் புதிய நிர்வாக அலுவலகம் திறப்பு
X

ஆவின் புதிய நிர்வாக அலுவலகத்தை திறந்து வைத்த  அமைச்சர் வேலு.

திருவண்ணாமலை வேங்கிகால் ஊராட்சியில் ஆவின் பால் பண்ணை வளாகத்தில் திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் ஒன்றிய நிதி மூலம் ரூபாய் 43 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஆவின் புதிய நிர்வாக அலுவலக கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை வகித்தார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ,சட்டமன்ற உறுப்பினர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர் .ஆவின் பொது மேலாளர் அமர வாணி அனைவரையும் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு, நிர்வாக அலுவலக கட்டிடத்தை திறந்து , வருவாய்த்துறை சார்பில் இணைய வழி வரன்முறை மூலம் செய்யப்பட்ட 142 பேருக்கு வீட்டு மனை பட்டாவும், சமூக நலத்துறை சார்பில் நான்கு வகையான திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நான்கு கோடி மதிப்பில் தங்க நாணயங்களும், 415 பயனாளிகளுக்கு திருமண நிதி உதவி தொகை, திருவண்ணாமலை அடுத்த நல்லான்பிள்ளை பெற்றான் கிராமத்தை சேர்ந்த தனியார் பத்திரிகையில் பணியாற்றி உயிரிழந்த ராஜேந்திரன் குடும்பத்திற்கு ரூபாய் மூன்று லட்சமும் வழங்கி விழா பேருரை ஆற்றினார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:

தமிழர்களின் பண்பாட்டின் அடையாளம் பால், பல கோடி ரூபாய் கொடுத்து வீடு கட்டினாலும் அந்த வீட்டில் முதலில் பால் காய்ச்சுவது தான் இன்றும் நடைபெற்று வருகிறது.

வட ஆற்காடு மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்டம் என்று பிரிக்கப்பட்டாலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர் விவசாயிகள் அனைவரும் வேலூரை மையமாக கொண்டு தான் செயல்பட்டு வந்தனர்.

வட ஆர்க்காடு மாவட்டத்தில் இருந்த பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை தனியாகப் பிரித்து திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தை உருவாக்க சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து திருவண்ணாமலை பால் உற்பத்தி குறித்து விரிவாக எடுத்துரைத்ததின் பேரில் கலைஞர் ஆட்சிக் காலத்தில் திருவண்ணாமலை பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தனியாக பிரிக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலை கூட்டுறவு ஒன்றியம் பால் உற்பத்தியில் 2 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்து வருவதாகவும், தமிழக அளவில் கறவை மாடு வளர்ப்பதில் திருவண்ணாமலை இரண்டாவது இடமாகவும் பால் உற்பத்தியில் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் திருவண்ணாமலை பால் கூட்டுறவு ஒன்றியம் முதலிடத்திற்கு வந்தால் தான் தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் இதற்கு விவசாயிகள் பாடுபட வேண்டும் என தெரிவித்தார்.

இதற்காக அரசு தரப்பில் என்னென்ன உதவிகள் வேண்டுமோ அனைத்தையும் இந்த அரசு செய்யும் என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு உற்றத் துணையாக இருக்கக்கூடிய ஆட்சி நமது திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார் .

விழாவில் கோட்டாட்சியர் மந்தாகினி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர்கள் ,தாசில்தார்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், நகர மன்ற தலைவர் நிர்மலா கார்த்தி வேல்மாறன் , திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன் மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி தமிழ்ச்செல்வன் ,ஆவின் நிர்வாக அலுவலர்கள், அரசு அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 11 Jan 2024 2:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?