/* */

திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா

திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் கோடைகால சிறப்பு இயற்கை சுற்றுலா பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு இயற்கை சுற்றுலா
X

கோடைகால சிறப்பு இயற்கை சுற்றுலா பயணத்தை தொடங்கி வைத்த மாவட்ட கலெக்டர்.

திருவண்ணாமலையில் இருந்து ஜவ்வாதுமலைக்கு பள்ளி மாணவர்கள் செல்லும் கோடைகால சிறப்பு இயற்கை சுற்றுலா பயணத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை, திருவண்ணாமலை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், திருவண்ணாமலை வனக்கோட்டம் ஆகியவை இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் சிறப்பு கோடைகால இயற்கை முகாமை நடத்தியது. இதையொட்டி, திருவண்ணாமலை, அடி அண்ணாமலை, கண்ணக்குருக்கை, கலசப்பாக்கம், போளூா், மேல்பட்டு, ஜமுனாமரத்தூா் பகுதிகளைச் சோ்ந்த 10 அரசுப் பள்ளிகளில் பயிலும் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை ஜவ்வாதுமலைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி, திருவண்ணாமலை, அடிஅண்ணாமலை, கண்ணக்குருக்கை, கலசபாக்கம், போளூர், மேல்பட்டு மற்றும் ஜமுனாமரத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 10 அரசு பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், மாணவர்களின் சுற்றுலா பயணத்தை, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

ஜவ்வாதுமலையில் பீபன் அருவி, சிறுவர் பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களை மாணவர்கள் பார்வையிடுகின்றனர். மாணவர்களுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பாடங்களும், வனம் மற்றும் வன உயிரினங்கள் சார்ந்த கருத்துக்களும் விளக்கப்பட்டது. சுற்றுச்சூழல் சார்ந்த விளையாட்டுகள், வினாடி வினா, வார்த்தை புதிர்கள் உள்ளடங்கிய செயல்பாட்டு புத்தகங்கள் மாணவர்கள் வழங்கப்பட்டன. மேலும், சுற்றுலாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு டி-சர்ட், தொப்பி, புத்தகம், பேனா, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் யோகேஷ்குமார் கார்க், உதவி வன பாதுகாவலர் வினோத்ராஜ், முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி,மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா், வனத்துறையினா், ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 1 May 2024 1:48 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  3. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  4. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  5. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    50வது பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  10. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!