மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி ரத்து

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி ரத்து
X

மதுரையில் பலத்த மழையால் அண்ணா நகர் தாசில் நகர் சித்தி விநாயக கோவில் தெருவில் ,குளம் போல தேங்கியுள்ள மழை நீர்.

மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததால், கொடைக்கானலில் படகு போட்டி ரத்து செய்யப்பட்டது.

மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களில், தொடர் மழை:

மதுரை , திண்டுக்கல் மாவட்டங்களில், தொடர் மழையால் தெருக்களில் மழை நீரானது குளம் போல தேங்கின. மதுரை மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு , மதுரை மாவட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவியது. பகல் நேரங்களில் அதிக வெப்பம் காணப்பட்டது. சில பகுதிகளில் வெப்பக் காற்று பகலில் வீசியது. அதற்காக, மதுரை நகரில் மாநகராட்சி சார்பில், முக்கிய சாலைகளின் தற்காலிகமாக பந்தல்கள் அமைக்கப்பட்டன. மேலும், கிராமங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இளநீர், நீர்மோர், வெள்ளரிக்காய் ஆகியவை அதிக விலைக்கு விற்கப்பட்டன.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக மதுரை மாவட்டத்தில், மதுரை, திருமங்கலம், மேலூர், சோழவந்தான், வாடிப்பட்டி, பரவை, சமயநல்லூர், தேனூர், கள்ளிக்குடி, உசிலம்பட்டி, வாலாந்தூர், செக்கானூரணி, கல்லுப்பட்டி, கருப்பாயூரணி, அழகர் கோவில், அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.


மதுரை நகரில் பலத்த மழை பெய்ததால், மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர், மருதுபாண்டியர் தெரு சித்தி விநாயகர் கோவில் தெரு, செந்தில் நாதன் தெரு ஆகிய தெருக்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் தேங்கிய மழை நீரை ,மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என, இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். சாலையில் குளம் போல தேங்கிய மழைநீர் பாம்புகளும் விஷ ஜந்துக்களும் இருப்பதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் அவ்வழியாக செய்வதற்கு அஞ்சுகின்றனர். மதுரை மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளர் சாலைகளை தேங்கிய மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து, மக்கள் நீதி மய்ய நிர்வாகி முத்துராமன் கூறியது:

மதுரை அண்ணா நகர் மருது பாண்டியர் தெரு, சித்து நாயக்கர் தெரு இப்பதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வார்டு உதவி பொறியாளர் பார்வையிட்டு மழை நீரை அகற்ற ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று நடக்கவிருந்த படகுப்போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
future ai robot technology