சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்

சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்

சென்னை ஐஐடியில் நடைபெற்ற இசை மாநாட்டில்  பங்கேற்ற இளையராஜா.

சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் வகையில் சென்னை ஐஐடியில் ஸ்பீக் மெக்கே சர்வதேச மாநாடு நேற்று மாலை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சியில் திரிபுரா மாநில கவர்னர் இந்திர சேனா ரெட்டி, இசையமைப்பாளர் இளையராஜா, ஐஐடி சென்னை இயக்குனர் காமகோடி கலந்து கொண்டனர். சென்னை ஐஐடி வளாகத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்குவதற்கு ஐஐடி சென்னை உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது .

விழாவில் இளையராஜா பேசியதாவது:-

இசையை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரு கிராமத்தில் இருந்து சென்னை வந்தேன். என்னுடைய அம்மா 400 ரூபாய் கொடுத்து அனுப்பினார். ஆனால் அந்த நாளில் இருந்து இந்நாள் வரை நான் இசையை கற்றுக்கொள்ளவில்லை இசையை கற்றுக் கொள்வதற்காக வந்தத நான் இப்போது ஐஐடி சென்னையில் இசை கற்றல் மையத்தை தொடங்கியுள்ளேன். ஒருவர் தண்ணீர் கேட்டால் அவருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. அவருக்கு தாகத்தை ஏற்படுத்த வேண்டும் .

தாகம் அதிகரிக்க, அதிகரிக்க அவரே தண்ணீரை தேடி கண்டுபிடிப்பார். அதேபோல்தான் படிப்பு மற்றும் வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் தாகம் இருக்க வேண்டும். அப்போது எந்த இலக்காக இருந்தாலும் நாம் அடைய முடியும். இந்த இசை கற்றல் மையத்தின் வாயிலாக 200 இளையராஜாக்களை உருவாக்க வேண்டும். இசை என்பது என் மூச்சு .இசையில் நான் சாதித்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் கிராமத்தில் இருந்து புறப்பட்டு வந்தபோது எப்படி இருந்தேனோ அதேபோல் தான் இப்போதும் இருக்கிறேன் மாணவர்கள் எங்கு சென்றாலும் நம்முடைய கலை, செல்வத்தை இங்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
இவ்வாறு இளையராஜா பேசினார்.

Tags

Read MoreRead Less
Next Story