முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் பல்வேறு கல்விகளில் சேர்வதற்கான சார்ந்தோர் சான்று பெறுவதற்கான வழிமுறைகள் பற்றி திருச்சி மாவட்ட ஆட்;சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
திருச்சிராப்பள்ளி மாவட்ட முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்தம் சார்ந்தோர்கள் அறிவது, 2023-24-ஆம் கல்வியாண்டிற்கு தங்களது சிறார்கள் பல்வேறு கல்விகளில் சேர்வதற்கு சார்ந்தோர் சான்று ஆன்லைன் (online) http://exwel..gov.in மூலம் விண்ணப்பித்து பெற்றிட வழிமுறைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி சார்ந்தோர் சான்று பெற்றிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அலுவலக வேலை நாட்களில் அலுவலகத்திற்கு வர இயலும் பட்சத்தில் கீழ்க்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பித்து சாh;ந்தோh; சான்று பெற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்லூி சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தின் எண், முன்னாள் படைவீரர் படைவிலகல் சான்று மற்றும் நகல், அடையாள அட்டை, இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட 10-ம்வகுப்பு +2மதிப்பெண் பட்டியல், 10-ம் வகுப்பு பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், மகன் மகள் பெயர்; தனியே part2-order publication செய்யப்பட்டிருந்தால் அதன் நகல் இணைக்கப்பட வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு முன்னாள் படைவீரர்நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 0431-2960579 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிந்து கொள்ளலாம்.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu