/* */

ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவை அமைச்சர் வேலு துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா
X

ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவில் அமைச்சர் வேலு, கலெக்டர் மோகன் ஆகியோர் மரக்கன்றை நட்டனர்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் எ வ.வேலு தொடங்கி வைத்தார்கள்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், கடந்த செப்டம்பர் மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1121 பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனை படைத்தோம். தற்போது பெய்த மழையால் 1.42 கோடி கன அடி நீர் சேகரித்து நீர்மட்டம் உயர்த்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் பசுமையாக மாற்றவும், மண் அரிப்பைத் தடுப்பதற்காகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள் உடன் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுகிறது என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், உதவி ஆட்சியர் பிரதாப், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, அருணை மருத்துவக்கல்லூரி துணைத் தலைவர் மருத்துவர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Updated On: 26 Nov 2021 5:54 AM GMT

Related News