தீ ரோடு ஆனது ஈரோடு! சுட்டெரிக்கும் வெயில்...

தீ ரோடு ஆனது ஈரோடு!  சுட்டெரிக்கும் வெயில்...
X
தமிழகத்தில் 20 இடங்களில் வெயில் சதத்தை கடந்தது. மரங்கள் அழிக்கப்பட்டதே வெயிலின் உக்கிரத்திற்கு காரணம்.

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 111.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாடு முழுவதும் 20 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவானது.

டாப் 10 இடங்களாக வேலூர் 111°F, ஈரோடு 110°F, திருச்சி 109°F, திருத்தணி 108°F, தருமபுரி 107°F, சேலம் 107°F, மதுரை 106°F, திருப்பத்தூர் 106°F, நாமக்கல் 106°F, தஞ்சாவூர் 106°F வெயில் பதிவு.

இன்றும் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. மே 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், இன்னும் வெயில் உக்கிரமடையும் என்றாலும், கோடை மழை பெய்வதற்கான வாய்ப்புகளும் நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

என்ன தான் இருந்தாலும் தமிழகம் வெயிலில் இந்த அளவு பாதிக்கப்பட்ட காரணம் மரங்கள் அழிக்கப்பட்டது தான் என சமூக ஆர்வலர்கள் புகார் எழுப்பி உள்ளனர். ரோடு போடுவதற்காக ஒரு மரம் வெட்டினால், 10 மரம் நடவு செய்ய வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டும் பயனில்லை. அந்த உத்தரவை கடந்த 15 ஆண்டுகளாக எந்த அரசும் கடைபிடிக்கவில்லை.

அ.தி.மு.க., அரசும் சரி, தி.மு.க., அரசும் சரி இயற்கையை அழிப்பதில் காட்டிய அக்கரையினை, பாதுகாப்பதில் காட்டவில்லை. ஆறுகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்களை துார்வாறி சீரமைத்து நீர் வளத்தை பெருக்கவோ, மரங்களை பாதுகாக்கவோ, கனிமவளங்களை பாதுகாக்கவோ தி.மு.க., அ.தி.மு.க., அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஏற்பட்ட துன்பத்தை பொதுமக்கள் அனுபவிக்கின்றனர் என சமூக ஆர்வலர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!