/* */

ஹெல்மெட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு

திருவண்ணாமலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி, போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

ஹெல்மெட் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு போலீசார் விழிப்புணர்வு
X

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதை வலியுறுத்த போலீசார் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை எம்.எல்.ஏ. அலுவலகத்தை அடுத்த ரவுண்டானா அருகே திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மற்றும் போலீசார், விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு பிரசாரத்தில், தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நூதன முறையில் முகம் பார்க்கும் கண்ணாடியை வாகன ஓட்டிகள் முன்பு காட்டி தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துக் கூறி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் தலைக்கவசம் அணிந்து வந்தவர்களுக்கு இனிப்பு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.. தலைக்கவசம் அணிவது குறித்து தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விரைவில் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Updated On: 22 March 2022 1:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பால் மற்றும் தயிர், இரண்டில் அதிக ஆரோக்கிய நன்மைகள் தருவது எதுவென்று...
  2. ஆன்மீகம்
    முருகப் பெருமானின் வேல்மாறல் மந்திரம் சொல்லும் அர்த்தங்கள் தெரியுமா?
  3. தொழில்நுட்பம்
    கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன் தயாரிப்பு..! சென்னையில் தொழிற்சாலை..!
  4. தொண்டாமுத்தூர்
    தொடர் மழையால் சித்திரைச்சாவடி தடுப்பணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    கோழி இறைச்சியா..? முட்டையா..? ஒரு ஆரோக்ய விவாதம்..!
  6. கோவை மாநகர்
    ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள்...
  7. கோவை மாநகர்
    பிரதமர் மோடியை கண்டித்து பல்வேறு கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்..!
  8. வீடியோ
    🔴 LIVE : எங்களுக்கு BEEF தான் வேணும் EVKS இளங்கோவன் திட்டவட்டம் ||...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    கிரகப்பிரவேசம், தருமே பல சுபகடாட்சம்..!