/* */

திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் நடவடிக்கை

திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர்பிரதீப்குமார் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

HIGHLIGHTS

திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற  ஆட்சியர் நடவடிக்கை
X
சீமை கருவேல மரம் (கோப்பு படம்)

திருச்சி மாவட்டத்தில் சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு அந்த இடங்களில் பயன் தரும் மரங்கள் நடுவதற்கு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து வருகிறார்.

திருச்சி மாவட்டத்தில் முதல் கட்டமாக 14 ஒன்றியங்களிலும் தலா ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு அந்த பகுதிகளில் நீர்நிலைகள் ,புறம்போக்கு பகுதிகள் மற்றும் தனியார் இடங்களில் பரவியுள்ள சீமை கருவேல மரங்களை முழுமையாக அகற்ற ஒன்றிய அளவில் குழு அமைக்கப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வகையில் அந்தநல்லூர் ஒன்றியத்தில் பேரூர், மணிகண்டத்தில் மாத்தூர், திருவெறும்பூரில் காந்தளூர் ,மணப்பாறையில் வடுகப்பட்டி, மருங்காபுரியில் தாதனூர், வையம்பட்டியில் இனாம் பொன்னம்பலப்பட்டி, லால்குடியில் ஆங்கரை,மண்ணச்சநல்லூரில் வலையூர், புள்ளம்பாடியில் நம்பு குறிச்சி, முசிறியில் காமாட்சிப்பட்டி ,தொட்டியத்தில் நாகையநல்லூர், தாபேட்டையில் கோனப்பம்பட்டி ,துறையூரில் சொக்கநாதபுரம், உப்பிலியபுரத்தில் இபாதர்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் கலெக்டர் தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து சீமை கருவேல மரங்கள் அவற்றும் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அவை வளராமல் தடுக்க மரக்கன்றுகள் நடும்பணியும் கொண்டு நிறுவனங்கள் தன்னார்வலர்கள் மூலம் நடந்து வருகிறது .அகற்றப்பட்ட சீமை கருவேல மரங்கள் மீண்டும் வளராமல் தடுக்க 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பலன் தரும் மரக்கன்றுகள் நடவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள 404 கிராம ஊராட்சிகளிலும் சீமை கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியரின் இந்த நடிவடிக்கை சமூக ஆர்வலர்கள் மற்றம் தொண்டு நிறுவனங்கள் மத்தியில் வரவேற்பை பெற்று உள்ளது.

Updated On: 23 May 2024 1:22 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    ஆதரவற்ற மாணவர்களுக்காக திருச்சி ஸ்ரீரங்கத்தில் இறகுகள் அகாடமி
  2. நாமக்கல்
    வெண்ணந்தூர் பகுதியில் கிராம சாலைகள் அமைக்கும் பணி: ஆட்சியர் உமா
  3. கரூர்
    கரூர் மாவட்டத்தில் கழிவு செய்யப்பட்ட காவல் துறை வாகனங்கள் 24ம் தேதி...
  4. ஈரோடு
    நாப்கின்களை கொண்டு மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு படத்தை உருவாக்கி...
  5. திருவெறும்பூர்
    குவைத் தீ விபத்தில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு அமைச்சர் அன்பில்...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் வேலைக்கு செல்லும் மகளிருக்கு விடுதி அமைக்க இடம் தேர்வு
  7. அரசியல்
    ‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர்...
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே தென்கரையில் டி.ஆர். மகாலிங்கத்துக்கு நூற்றாண்டு...
  9. திருவள்ளூர்
    பெரியபாளையம் பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
  10. திருப்பரங்குன்றம்
    மதுரை: எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன்...