ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள் பறிமுதல்

ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள் பறிமுதல்
X

Coimbatore News- மாம்பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்.

Coimbatore News- குடோன்கள், மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில், ரசாயன பொட்டலங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 16.1 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கோவை மாநகரில் பகுதியில் ஆய்வு செய்தனர்.

வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவள வீதி, கருப்ப கவுண்டர் வீதி, கெம்பட்டி காலனி வீதி ஆகிய பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஏழு குழுக்களாக திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர். இந்த கள ஆய்வின் போது குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை கடைகள் என மொத்தம் 55 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது. அதில் 15 குடோன்கள் மற்றும் 16 மொத்த விற்பனை கடைகளில் சிறிய இரசாயன பொட்டலங்களை ஒவ்வொரு பழ பெட்டிகளுக்குள் வைக்கப்பட்டு உள்ளதை கண்டுபிடிக்கப்பட்டது.

அவ்வாறு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் சுமார் 16.1 டன் எடையும், மேலும் சுமார் 100 கிலோ எடை அளவு உள்ள விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அழுகிய ஆப்பிள் என மொத்தம் 16,207 கிலோ எடையுள்ள பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் மாநகராட்சி குப்பை கிடங்கில் உள்ள உரம் தயாரிக்க வைக்கப்பட்டு உள்ள கிடங்கில் கொட்டி அழிக்கபட்டு, அதன் பின்னர் அதனை உரமாக தயாரிக்க முழுவதுமாக அரைக்கப்பட்டது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பழங்களின் சந்தை மதிப்பு, சுமார் ரூபாய் 12 இலட்சத்து 91 ஆயிரத்து 560 எனவும், 21 மொத்த விற்பனை கடைகள் மற்றும் குடோன்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் நோட்டிஸ் வழங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இது போன்று சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபட கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டது. இந்த ஆய்வில் செயற்கை முறையில் பழுக்க வைக்க பயன்படுத்திய இரசாயன பாக்கெட்டுகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story