/* */

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு திமுகவினர் அஞ்சலி
X

பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய டாக்டர் கம்பன்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை முன்னிட்டு திருவண்ணாமலை வேலூர் சாலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு சி.என்.அண்ணாதுரை எம்.பி., தலைமை செயற்குழு உறுப்பினர்கள் இரா.ஸ்ரீதரன், பொன்.முத்து, எம்.எல்.ஏ.க்கள் கிரி, சரவணன், மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.

மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் தலைமையில் கட்சியின் முன்னோடிகள் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து ஒடிசா மாநில ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் ஏராளமானோர் மரணம் அடைந்த காரணத்தால் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற இருந்த கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்தச் செய்யப்பட்டிருந்தன.

பின்னர் நேற்று இரவு பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் வந்த பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே. கம்பன் தலைமையில் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், ஒன்றிய செயலாளர்கள் ஆராஞ்சி ஆறுமுகம், சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒன்றிய குழு தலைவர்கள், நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர நிர்வாகிகள் நேரு, கண்ணதாசன், ஆறுமுகம், நகர மன்ற உறுப்பினர்கள் உட்பட மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் திமுக முன்னோடிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 4 Jun 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  4. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  5. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  6. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  7. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  8. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...