/* */

துரிதமாக நடந்துவரும் கத்தேரி பிரிவு மேம்பால கட்டுமானப் பணி; நெரிசலில் சிக்கி தினமும் மக்கள் அவதி

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால கட்டுமானப்பணி வேகமாக நடந்து வருகிறது. அதே நேரத்தில் தினமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மக்கள் அவதிப்படுகின்றனர்.

HIGHLIGHTS

துரிதமாக நடந்துவரும் கத்தேரி பிரிவு மேம்பால கட்டுமானப் பணி; நெரிசலில் சிக்கி தினமும் மக்கள் அவதி
X

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் மேம்பால கட்டுமானப்பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குமாரபாளையம் கத்தேரி பிரிவு பகுதியில் அன்றாட வேலைக்கு செல்பவர்கள், வட்டமலை, எதிர்மேடு பகுதியில் உள்ள எண்ணற்ற கல்லூரிகளில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர், சேலம் கோவை புறவழிச்சாலையை கடந்து சென்று வந்தனர். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலரும் உயிரிழந்து வந்தனர். இதனை தடுக்க இந்த இடத்தில் மேல்பாலம் அமைக்க பல்வேறு தரப்பினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதன் பலனாக இங்கு மேம்பாலம் கட்டும் பணி துவங்கி துரிதமாக நடந்து வருகிறது.

இதற்காக சர்வீஸ் சாலை வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆனால் கத்தேரி பிரிவு சர்வீஸ் சாலை வளைவு பகுதியில் பிளெக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்கள், கடை விளம்பரங்கள் என ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால், வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இதனால் அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் நின்று ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கால விரயம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது. குமாரபாளையம் ஜவுளி உற்பத்திக்கு தேவையான நூல்களை ஏற்றி வரும் லாரிகள், இதர கடைகளுக்கு சாமான்கள் ஏற்றிவரும் சரக்கு வாகனங்கள், சேலம், திருச்செங்கோடு, சங்ககிரி, நாமக்கல் உள்ளிட்ட பகுதிக்கு செல்லும் பேருந்துகள் குமாரபாளையம் நகரிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள், என பலதரப்பட்ட வாகனங்கள் செல்ல பெரிதும் சிரமம் ஏற்படுகிறது. இந்த பகுதியில் இருபுற சர்வீஸ் சாலையில் எந்த போக்குவரத்து போலீசாரும் நின்று போக்குவரத்து சரி செய்வது இல்லை.

ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் நிலை மாற, உடனே இந்த இருபுற சர்வீஸ் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், போக்குவரத்து போலீசார் சிப்ட் முறையில் செயல்பட்டு, இரவு பகலாக போக்குவரத்து சீர் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இடையூராக இருக்கும் பேனர்கள் அகற்றப்பட்டு, இங்கு பேனர்கள் வைக்க தடை விதிக்க வேண்டும்.

Updated On: 25 April 2024 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க