/* */

குப்பைக் கிடங்கு, நுண் உர மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

நகராட்சிக்கு உள்பட்ட குப்பைக் கிடங்கு, நுண் உர மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

HIGHLIGHTS

குப்பைக் கிடங்கு, நுண் உர மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு
X

குப்பைக் கிடங்கு, நுண் உர மையம் ஆகியவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் 

திருவண்ணாமலை நகராட்சிக்கு உள்பட்ட குப்பைக் கிடங்கு, நுண் உர மையம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருவண்ணாமலை நகராட்சி 39 வாா்டுகளில் சேகரமாகும் குப்பைகள், வேலூா் சாலை, ஈசான்ய மைதானத்தில் உள்ள குப்பைக் கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்கு தினமும் 250 கியூபிக் மீட்டா் என்ற அளவில் குப்பைகளை தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, மொத்தமுள்ள 55 ஆயிரத்து 480 மெட்ரிக் கியூபிக் மீட்டா் குப்பைகளில் இதுவரை 15 ஆயிரத்து 700 மெட்ரிக் கியூபிக் மீட்டா் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள குப்பைகளை தரம் பிரிக்கும் பணியை 4 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும். இதுதவிர, வாா்டு உறுப்பினா்கள் மற்றும் நகராட்சி அலுவலா்களைக் கொண்டு வீடு, வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து வழங்க பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், திருவண்ணாமலை நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கோயில் நகரமான திருவண்ணாமலை நகரத்தை தூய்மையாகவும் மக்கும் குப்பை மக்கா குப்பைகள் என பிரித்து வழங்கி நகராட்சி நிர்வாகத்திற்கு உறுதுணையாக இருக்க பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் வர்த்தகம் செய்யும் வர்த்தகர்கள், கடை உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், தங்கள் கடைகளில் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து மஞ்சப்பை, துணிப்பை, பாத்திரம் பயன்படுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

இதேபோல, செங்கம் சாலையில் உள்ள திடக்கழிவு மேலாண்மைத் திட்ட நுண் உர மையத்தையும் ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இங்கு உற்பத்தி செய்யப்படும் நுண் உரத்தை பொதுமக்களுக்கு அதிகளவில் விற்பனை செய்ய வேண்டும் என்று அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, நகராட்சி ஆணையா் வசந்தி மற்றும் நகராட்சி அலுவலா்கள் உடனிருந்தனா்.

Updated On: 11 Feb 2024 1:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?