/* */

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் விடுமுறை நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

HIGHLIGHTS

அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
X

அண்ணாமலையார் கோவில் 

கடந்த மாதம் மழையின் காரணமாக தீபத் திருவிழாவின் போது சாமி தாிசனம் செய்ய வர முடியாத பக்தர்கள் சாமி தாிசனம் செய்ய தினமும் ஏராளமானவர்கள் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் கொரோனா வைரசின் அடுத்த உருமாற்றமான ஒமிக்ரான் வைரஸ் வெளி நாடுகளில் பரவ தொடங்கி உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இன்று அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தாிசனம் செய்ய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் பலர் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை குறைந்து காணப்படுகிறது. நாளுக்கு நாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதால் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் வலியுறுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 6 Dec 2021 1:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?