/* */

நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் வளா்ச்சிப் பணி: ஆய்வு செய்த அமைச்சா்

Development Work -காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் முழுவதும் பயனடைவார்கள் என்று அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நகா்ப்புற வளா்ச்சித் துறை சாா்பில் நடைபெறும் வளா்ச்சிப் பணி: ஆய்வு செய்த அமைச்சா்
X

பூ மார்க்கெட் அமைப்பது தொடர்பாக நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சர் கே என் நேரு மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு.

Development Work -தமிழக நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கீழ் திருவண்ணாமலை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தமிழக பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் வேலு தலைமை வகித்தாா். தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 3 மாவட்டங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்தாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை துணைத் தலைவா் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா்கள் முருகேஷ் (திருவண்ணாமலை), அமா்குஷ்வாஹா (திருப்பத்தூா்), திருவண்ணாமலை தொகுதி மக்களவை உறுப்பினா் அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் கிரி (செங்கம்), சரவணன் (கலசப்பாக்கம்), அம்பேத்குமாா் (வந்தவாசி), ஜோதி (செய்யாறு) மற்றும் திருவண்ணாமலை, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சோந்த நகராட்சிகள், பேரூராட்சிகளின் தலைவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் கே என் நேரு பேசியதாவது:

கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 1000 கோடி,. நமக்கு நாமே திட்டத்தில் ரூபாய் 100 கோடி,,நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 400 கோடி நிதியினை , தமிழக முதலமைச்சர் வழங்கி இருக்கிறார். தற்போது இந்த கூட்டம் நடத்துவதன் நோக்கம் மக்களுக்கு அடிப்படை தேவைகள் என்னென்ன இருக்கிறது என்று அறிந்து கொண்டு வாருங்கள் என்று தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதன் பேரில்தான் இன்றைய தினம் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் கேட்டு கொண்டதன் பேரில் முதல்-அமைச்சர் ரூ.9 ஆயிரத்து 600 கோடிக்கு திட்டம் தந்து உள்ளார். விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகின்றது. திட்ட அறிக்கை முடிந்த பின்னர் அந்த பணிக்கு டெண்டர் விடப்படும். மழை காலங்கள் வருவதால் ஏற்கனவே உள்ள கால்வாய்களை தூர்வாரி வைத்து கொள்ள வேண்டும்.

புதிய இடங்களில் கால்வாய்கள் தோண்டப்படுமானால் விரைந்து பணிகளை முடிக்க அனைத்து ஆணையாளர்களுக்கும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலையை மாநகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை முதல்- அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

பொதுப்பணித்துறை அமைச்சர் தெரிவித்துள்ள வரி பிரச்சினை குறித்து துறை அலுவலர்களிடம் கலெக்டர் கலந்து பேசி சரி செய்து கொள்ளலாம். நகராட்சி துறையில் கடைகளுக்கு 10, 15 ஆண்டுகள் வாடகை கூட்டாத காரணத்தினால் ஒரே நேரத்தில் 50 சதவீதம், 75 சதவீதம், 100 சதவீதம் என்று கூட்ட வேண்டிய நிலை வந்து உள்ளது. இதனை 3 வருடத்திற்கு ஒரு முறை பரிசீலனை செய்து வந்தால் எந்தவித பிரச்சினையும் இருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கே என் நேரு கூறியதாவது:

அமைச்சர் எ. வ .வேலு திருவண்ணாமலைக்கு வேண்டுமென சில கோரிக்கைகளை என்னிடம் வைத்தார். முதலில் காந்தி நகர் மைதானத்தில் காய்கறி மார்க்கெட் வேண்டும் என்றும், கூட்ட அரங்கம் ஒன்று வேண்டும் என்றும், மேலும் மல்டி காம்ப்ளக்ஸ் பார்க்கிங் பழைய நகராட்சி இருந்த இடத்தில் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரிடம் கலந்து ஆலோசித்து அதை நிறைவேற்றுவோம்.

மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் 9 ஆயிரத்து 600. கோடி ரூபாய் செலவில் அனுமதி அளித்துள்ளார். அதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டம் முழுதும் குடிநீர் பெற்று மக்கள் பயனடைவர். இதேபோல் 30 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் ஏற்கனவே கூறிய இடத்திலேயே பேருந்து நிலையம் அமையும் அதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது . இவ்வாறு அவர் கூறினார்.

அதன்பின் திருவண்ணாமலை காந்திநகர் பைபாஸ் சாலையில் உள்ள மைதானத்தில் காய்கறி மற்றும் பூ மார்க்கெட் அமைப்பது தொடர்பாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 25 Aug 2022 10:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  2. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  6. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  7. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  8. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...
  9. வீடியோ
    🔥நீ மேல கை வச்சு பாரு🔥தொண்டர்கள் உச்சகட்ட ஆரவாரம் |🔥Annamalai...
  10. ஆன்மீகம்
    50 கிறிஸ்துமஸ் வாழ்த்துகள் தமிழில்