/* */

திருவண்ணாமலை பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில் தள்ளு முள்ளு

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில் தள்ளு முள்ளு
X

பட்டா மாறுதலுக்கு காத்திருந்த மக்கள் 

திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாமில், ஏராளமானோர் கலந்து கொண்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பட்டா மாறுதல் உள்ளிட்ட பல பணிகள் தடைபட்டிருந்தன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டா மாறுதல் முகாம் இன்று நடைபெறும் என ஆட்சியர் முருகேஷ் கடந்த வாரம் அறிவித்திருந்தார். இதையடுத்து, பட்டா மாற்றம் செய்வதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனுக்களுடன் வரிசையில் காத்திருந்தனர் .

நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள், ஒரு கட்டத்தில் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் உள்ளே நுழைய முயன்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை தடுக்க முடியாமல் காவல்துறையினரும் சிரமத்திற்கு உள்ளாகினர். கொரோனா பரவல் சூழ்நிலையில், பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொண்டது தொற்று பரவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்டம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள் வருகை தந்ததால் கூட்டம் அதிகமானது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதலுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

நாளையும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல் உள்ளிட் பணிகள் சிறப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தாங்கள் சார்ந்துள்ள பகுதியில் உள்ள தாலுகா அலுவலகங்களில் அதிகாரிகளை தொடர்புகொண்டு சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Sep 2021 2:27 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  2. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  4. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  5. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?
  7. தொண்டாமுத்தூர்
    நகை பறிப்பு, திருட்டு கொள்ளை சம்பவங்கள் கோவையில் அதிகரித்துள்ளது :...
  8. லைஃப்ஸ்டைல்
    வீரர்கள் சாப்பிடும் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் எவை தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ‘மாற்றம் ஒன்றே மாறாதது’ - மாற்ற முடியாத மாற்றங்களை (ஏ)மாற்றமின்றி...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க குழந்தைக்கு இதெல்லாம் குடுங்க..!