அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!

One Month Friendship Quotes- நட்புக்கு முகவரி தேவையில்லை (மாதிரி படம்)
One Month Friendship Quotes- போடாதசண்டையில்லை! பேசாத நியாயமில்லை ! சிரிப்புக்கோ பஞ்சமில்லை! கூற முடியாத மன வலியும், புரிந்து கொள்ளும் என் மனக் கண்ணாடி அவன்! மகிழ்ச்சியாக இருப்பினும், துயரக்கடலாக இருப்பினும், மனம் தேடுவதற்கு முன் என்னருகில் இருப்பான் எந்தன் தோழன்!
-
மலரின் வாசம் அனைவரையும் கவரும் - அதுபோல நம் நட்பின் சுவாசம் அனைவரையும் கவரட்டும்!
-
கடவுளால் எந்நேரமும் எல்லாரிடமும் இருக்க முடிவதில்லை. எனவே நண்பர்களைப் படைத்து அனுப்பி வைக்கிறான்! சிலருக்கு உயிரைக் கொடுக்கும், கர்ணனைப் போல! சிலருக்கு உயிரை எடுக்கும் நரிக்கூட்டத்தைப் போல!
-
நட்பே! முதல் உறையாடலில், கலைந்து போகும் மேகமென நினைத்த உன்னை இன்று, என்றும் நிலையான வானமாக பார்க்கிறேன் உன் அக்கறையான அன்பால்!
-
பல நாட்களுக்கு ஒரு முறை பேசினாலும், நண்பனின் பட்டப்பெயர் தான் முதலில் ஞாபகத்தில் வருகிறது!
-
காற்று அடித்தால் கலைந்து போக- இது ஒன்றும் மேகம் அல்ல! காரணம் இல்லாமல் மறைந்து போக- இது ஒன்றும் கனவும் அல்ல! அருகில் சென்று பார்த்தால் காணாமல் போகும் கானல் நீர் அல்ல! நம் உயிர் கல்லறை செல்லும் வரை தொடரும் உண்மையான நட்பு!
-
நண்பர்களோடு இருக்கும் போது சுற்றத்தை மறந்து, சிரிப்பின் எல்லை வரைக்கும் சென்று, அளவில்லாத மகிழ்வான தருணங்களை கொடுத்த நண்பர்களை நினைத்து விழி ஓரம் கண்ணீர் கசிகிறது!
-
செழிப்பு நண்பர்களைச் சேர்க்கிறது! வறுமை நண்பர்களை சோதிக்கிறது!
-
எவ்வளோ அசிங்கமா திட்டு வாங்கினாலும், திட்டு வாங்காத மாதிரியே பேச நண்பனால் மட்டுமே முடியும்!
-
காரணமே இல்லாமல் கடுங்கோபம் கொண்ட போதும் அருகில் வந்து அமைதியாகக் கரம் பற்றி, அன்போடு அரவணைத்து ஆதரவாக ஆறுதல் கூறும் அழகான நட்பு கிடைப்பது கடினம். கிடைத்தால் இழந்து விடாதீர்கள்!
-
எதிர்பாராத சந்திப்பில் தோன்றும் இதழோர புன்னகை, நினைவுபடுத்தும் நட்பின் பசுமையை!
-
கவிதை உலகில் பல, தலைப்புகளைக் கொண்டு மெல்ல மெல்ல பாதம் வைத்த நான் இன்று ஒவ்வொரு கவிதையிலும் தடம் பதிக்கிறேன்! நம் நட்பின் பெருமையை!
-
மட்காத குப்பைகளை சேகரிக்க, ஆசை கொள்ளும் குப்பை தொட்டி நட்பு நினைவாக!
-
நல்ல நட்புக்கு, ஆணா பெண்ணா தேவையில்லை துரோகம் இல்லாத நம்பிக்கையே போதும்!
-
நண்பர்கள், எங்கோ ஓர் முறை சந்தித்து கொண்டாலும், நெடுந்தூர பாதை எங்கும் ஒன்றுக்கொன்று துணையாய் பாரங்கள் பகிர்ந்து, தனிமைகள் தவிர்த்து, தடைகள் ஒன்றாய் கடந்து வாழ்கையின் பயணம் சிறக்க செய்கின்றன! தண்டவாளங்கள் - நல்ல நண்பர்கள்.
-
உனக்காக எதையும் விட்டுக்கொடுப்பேன்னு சொல்றத விட உன்ன எதுக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்னு சொல்றது தான் உண்மையான நட்பு!
-
நிலவு இரவில் தினந்தோறும் வந்து செல்லும்! ஆதவன் பகலில் தினந்தோறும் வந்து செல்லும்! அதுபோல தான், நம் வாழ்விலும் துயரங்கள் தினந்தோறும் வந்து செல்லும்! நிலையற்ற காதலும் வந்து செல்லும்! ஏன் பொய்யான உறவுகள் கூட, வந்து செல்லும். ஆனால் நம்மிடையே நிலையாய் இருப்பவன் நம் நண்பன்!
-
சிறுபிள்ளை முதல் பிரியாத, முறியாத உறவு நட்பு மட்டுமே!
-
காலங்கள் அழிந்தாலும், எக்காலத்தும் அழியாதது, நட்பு மட்டுமே!
-
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu