/* */

தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் கலெக்டர் ஆய்வு

HIGHLIGHTS

தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆய்வு
X

திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ்

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டு பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருவதை ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி பெண்கள் மேல் நிலைப் பள்ளி, தர்கா சந்து ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் மரு. அஜிதா, திருவண்ணாமலை நகராட்சி திருமதி. ஆர். சந்திரா, நகர் நல அலுவலர் மரு. மோகன், அரசு அலுவலர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கோவிட் தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் அரசு மருத்துவமனைகள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலம் தினமும் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் இன்று நகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கோவிட்19 சிறப்பு முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது தவனை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதை கலெக்டர் முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இன்று நடைபெற்ற முகாமில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் 81 நபர்களும் பெண்கள் 36 நபர்களும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்கள் 36 நபர்களும் பெண்கள் 23 நபர்களும் செலுத்தி கொண்டனர்.

தேரடிவீதியில் உள்ள தனியார் துணிக்கடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவதன் அவசியம் குறித்தும், முக கவசம் அனிவதன் அவசியம் குறித்தும் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை தடுப்பூசி செலுத்தி கொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டார். மேலும் கோபால் தெரு, தர்கா சந்தில் உள்ள மக்கா மஸ்ஜித் & மதரஸா பள்ளிவாசலில் தொழுகைக்கு வருபவர்களிடம் தாங்களும் தங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களும் தடுப்புசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று கேட்டுகொண்டார்.

மேலும் தேரடி வீதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக் கடைகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, வரும் வாடிக்கையாளர்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளவதன் அவசியம் குறித்தும். முக கவசம் அனிவதன் அவசியம் குறித்தும் பொதுமக்களுக்கு அறிவுறுத்துமாறு விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

Updated On: 31 July 2021 2:56 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  3. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  4. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  5. வீடியோ
    😭தேம்பி தேம்பி அழுத பள்ளி மாணவி | | ஆறுதல் சொன்ன Annamalai |...
  6. வீடியோ
    DMK-வில் புல்லுருவிகளை களையெடுக்க மீண்டும் இறக்கப்படுகிறார் Prashant...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  9. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  10. அருப்புக்கோட்டை
    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டிய அமைச்சர்!