/* */

வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
X

வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து திருவண்ணாமலை  கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை தாலுகா காட்டாம்பூண்டி கிராமத்தில் வருவாய்த்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து கலெக்டர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது காட்டாம்பூண்டி கிராமத்தில் வசிக்கும் இஸ்லாமியர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கான மயானத்திற்காக கூடுதல் இடங்களும் ஆய்வு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் வீடு இல்லா ஏழை, எளியவர்கள் காட்டாம்பூண்டி அரசு புறம்போக்கு நிலத்தில் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். கல்லாங்குத்து புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வசித்து வரும் 18 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உறுதி அளித்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறைக்கு சொந்தமான இடத்தில் வீடுகட்டி வசித்து வரும் 15 பேருக்கு அதே இடத்தில் பட்டா வழங்குவது குறித்து நில நிர்வாக ஆணையாளரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், திருவண்ணாமலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், திருவண்ணாமலை உதவி கலெக்டர் வெற்றிவேல், திருவண்ணாமலை ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான மேற்பார்வையாளர் காளிமுத்து, தாசில்தார் சுரேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 7 April 2022 3:18 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?