/* */

பெண் குழந்தைகள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

சமூக முன்னேற்றத்திற்கு பங்காற்றும் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

பெண் குழந்தைகள் விருது பெறுவதற்கு விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்

சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் பெண் குழந்தைகள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி மாதம் 24-ந்தேதி மாநில அரசின் விருதுக்கான காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தகுதியுடைய பெண் குழந்தைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 13 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட தமிழகத்தில் வசிக்கும் பெண் குழந்தை வீர, தீர செயல் புரிந்திருக்க வேண்டும். பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல், வேறு வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருத்தல், வேறு வகையில் பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கல், மூடநம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

விருது மாநிலத்தில் ஒவ்வொரு வருடமும் மேற்கண்ட அம்சங்களில் சிறந்து விளங்கும் ஒரு பெண் குழந்தை தேர்ந்தெடுக்கப்பட்டு பாராட்டு பத்திரம், ரூ.1 லட்சத்திற்கான காசோலை வழங்கப்படும். மாநில அளவிலான தேர்வு குழு மூலம் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களை கூர்ந்தாய்ந்து மேற்கண்ட விருதினை பெற உரிய நபர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

இவ்விருதினை பெற உரிய முன்மொழிவுகளை முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம்), காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனங்கள் ஆகியோர்களிடம் விபரமறிந்து பரிந்துரைக்கலாம்.

எனவே, பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்த 5 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தையை மேற்கண்ட விதிமுறைகளை பின்பற்றி தேர்ந்தெடுத்து கருத்துரு சமூகநல ஆணையரகம் அனுப்பி வைக்க ஏதுவாக 23.11.2020-க்குள் மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம் 2-வது தளம், வேங்கிக்கால், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 3 Oct 2022 12:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்