/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா: துணை சபாநாயகர் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா: துணை சபாநாயகர்  பங்கேற்பு
X

கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள உலக மாதா பேராலயத்தில் பங்குத்தந்தை ஞானஜோதி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

பெரியார் சிலை அருகே உள்ள ஏ எல் சி தேவாலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி கலந்துகொண்டு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அவர்கள் சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் கார்மேல் சர்ச் போதகர் சாமுவேல் அவர்களிடம் இனிப்புடன் கூடிய சாக்லேட் மற்றும் கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டையை திமுக நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், தொமுச அமைப்பாளர் ஆறுமுகம், திமுக சிறுபான்மையினர் பிரிவு நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள்.

ஆரணி பழைய ஆற்றுப்பாலம் அருகில் உள்ள சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

அதிகாலை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. கேக்குகள் வெட்டி ஒருவருக்கு ஒருவர் கேக் ஊட்டி மகிழ்ந்தனர். தேவாலயத்தில் இயேசு பிறப்பு குறித்த குடில்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சேத்துப்பட்டு தூய லூர்து அன்னை தேவாலயத்தில் நள்ளிரவு பங்குதந்தை விக்டர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

வேட்டவலம் புனித இருதய ஆலயத்தில் பங்குத்தந்தை ஆரோக்கியசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Updated On: 25 Dec 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?